சென்னையில் அதிர்ச்சி; Bike Taxi - யில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை - நடந்தது என்ன?
சென்னையில் இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பைக் டாக்சி ஓட்டுநர் கைது.

நானே தினமும் உங்களை அழைத்து செல்கிறேன்
சென்னை புரசைவாக்கம் பகுதியில் வசித்து வரும் 24 வயது பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அப்பெண் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பைக் டாக்சி ஒன்று புக்கிங் செய்து புரசைவாக்கத்திலிருந்து தேனாம்பேட்டையில் உள்ள அப்பெண்ணின் அலுவலகத்துக்கு சென்றுள்ளார். அப்போது அந்த பைக் டாக்சி ஓட்டுநர் நானே தினமும் உங்களை அழைத்து செல்கிறேன் என கூறியதன் பேரில் தினந்தோறும் அழைத்துச் சென்றுள்ளார்.
பெண்ணிடம் அத்து மீறிய பைக் டாக்ஸி ஓட்டுனர்
இந்நிலையில் வழக்கம் போல் நேற்று காலை புரசைவாக்கத்திலிருந்து தேனாம்பேட்டைக்கு செல்லும் வழியில் அண்ணா மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது பைக் டாக்சி ஓட்டுநர் அப்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபமடைந்த அப்பெண் உடனே பைக்கை நிறுத்தச் சொல்லி இறங்கியுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் E-3 தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் , போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இருசக்கர வாகனம் பறிமுதல்
E-3 தேனாம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் சம்பவ இடத்தில் விசாரணை செய்து , இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட நாமக்கல் மாவட்டம் சேந்தமங்களம் பகுதியை சேர்ந்த சதீஸ்குமார் ( வயது 45 ) என்பவரை கைது செய்தனர். குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய Honda Activa இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட சதீஸ்குமார் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி ரூ.2 கோடிக்கு மேல் மோசடி செய்து போர்ச்சுகல் நாட்டில் தலைமறைவாக இருந்த நபர் சென்னை ஏர்போர்டில் கைது.
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பத்மநாபன் ( வயது 23 ) என்பவரிடம் கடந்த 2023ம் வருடம் சென்னையை சேர்ந்த சைபுதின் ( வயது 51 ) என்பவர் போலந்து நாட்டில் Meat Cutter வேலை வாங்கி தருவதாக பணம் ரூ.1.25,000/-பெற்றுக் கொண்டு போலந்து நாட்டிற்கு வேலைக்கான விசா வாங்கி தராமலும் , பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றியதாக பத்மநாபன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இவ்வழக்கின் புலன் விசாரணையில் சைபுதின் கடந்த 2023 - ம் ஆண்டு செயல்பாட்டில் இல்லாத Saif International என்ற கன்சல்டன்சி பெயரில் Protector of Emigrants-ல் மத்திய அரசின் உரிமம் பெறாமல் போர்ச்சுகல் , இத்தாலி , கேமேன் தீவு , போலந்து மற்றும் ஜெர்மன் ஆகிய நாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் 193 நபர்களிடம் பணம் ரூ.2 கோடிக்கு மேல் வங்கி கணக்கு மூலமாகவும் நேரடியாகவும் பெற்றுள்ளது விசாரணையில் தெரிய வந்ததால் , கடந்த 30.01.2025-ம் தேதி மாகம் வினய் வர்தன் என்பவர் இந்த குற்ற சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது.
இவ்வழக்கில் எதிரி மாகம் வினய் வர்தனை தேடி வந்த நிலையில் அவர் வெளிநாட்டில் தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது. அவருக்கு LOC கொடுக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று 31.07.2025 - ம் தேதி போர்ச்சுகல் நாட்டில் தலை மறைவாக இருந்து வந்த மாகம் வினய் வர்தன் ( வயது 36 ) என்பவரை சொந்த ஊரான நெல்லூருக்கு வரும் போது சென்னை ஏர்போர்டில் வைத்து விமான நிலைய அதிகாரிகளால் தடுத்து நிறுத்தி ஆஜர் செய்யப்பட்டவரை , மத்திய குற்றப்பிரிவு , வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து மோசடி பணத்தில் வாங்கிய Dell லேப்டாப் Iphone -2, Apple watch - 1, நகைகள் மற்றும் யூரோ பணம் கைப்பற்றப்பட்டது. விசாரணையில் கைது செய்யப்பட்ட மாகம் வினய் வர்தன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.





















