போலீசுக்கே விபூதி அடித்த பலே பெண்.. “நான் நீதிபதியின் மகள்” எனக்கூறி என்ன செய்தார் தெரியுமா?
நீதிபதியின் மகள் என்று கூறி போலீசாரை ஏமாற்றிய பெண் காவலர் கைது செய்யப்பட்டார்.

" நான் " நீதிபதியின் மகள்
சென்னை செம்பியம் காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட பெண் ஒருவர் தான் பெரம்பூர் ரயில் நிலையம் எதிரில் உள்ள ஹோட்டலில் தங்கி இருப்பதாகவும் தான் ஒரு நீதிபதியின் மகள் என்றும் தனக்கு உணவு ஆர்டர் செய்து தரும் படி கேட்டுள்ளார். ஏற்கனவே இந்த பெண் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இதே போன்று ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு போலீசாரை பில் கட்ட வைத்துள்ளார்.
போலீசார் விசாரணை
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் இது குறித்து செம்பியம் உதவி கமிஷனர் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து செம்பியம் போலீசார் பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே உள்ள ஹோட்டலுக்கு சென்று விசாரணை நடத்தினர் விசாரணையில் அந்த பெண் கொளத்தூர் அகரம் பகுதியை சேர்ந்த ரேகா ( வயது 42 ) என்பதும் திருமணம் ஆகி அவரது கணவர் உடல் நலம் குறைவு காரணமாக வீட்டில் இருந்து வருவதும் தெரிய வந்தது.
காவலராக பணி புரிந்த பெண்
மேலும் , இவர் பிராட்வே , எக்ஸ்பனேடு காவல் நிலையத்தில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு காவலராக பணி புரிந்து வந்துள்ளார். அதன் பிறகு பணிக்கு செல்லவில்லை என்பதும் தெரிய வந்தது. இவர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது இவருக்கு தெரிந்த அரசு வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் பெயர்களை வைத்து பல்வேறு இடங்களில் தான் நீதிபதியின் மகள் என்றும் வழக்கறிஞர்களை எனக்கு தெரியும் என்றும் கூறி போலீசாரிடம் ஹோட்டலில் பில் கட்ட சொல்வது ரூம் எடுத்து தர சொல்வது என பல்வேறு முறைகேடான விஷயங்களில் இவர் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து செம்பியம் போலீசார் இது குறித்து ரேகா மீது வழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஆன்லைனில் ஆர்டர் செய்து , போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த இரண்டு பேர் கைது. 250 மாத்திரைகள் பறிமுதல்
சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்திறகு உட்பட்ட பகுதியில் வலி நிவாரண மாத்திரைகளை சிலர் விற்பனை செய்து வருவதாக கொடுங்கையூர் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கொடுங்கையூர் போலீசார் வியாசர்பாடி , எம்.கே.பி நகர் முல்லை காம்ப்ளக்ஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை செய்தனர்.
அப்போது அந்த வீட்டில் இருந்து 254 வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மாத்திரைகளைப் பதுக்கி வைத்திருந்த ஜீவா ( வயது 25 ) என்பவரை கொடுங்கையூர் போலீசார் கைது செய்தனர்.
இவர் கொடுத்த தகவலின் பெயரில் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த பாலாஜி பாபு ( வயது 26 ) என்ற நபரையும் போலீசார் கைது செய்தனர். பாலாஜி பாபு என்பவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஆன்லைனில் வலி நிவாரண மாத்திரைகளை ஆர்டர் செய்து வட மாநிலத்தில் இருந்து மாத்திரைகளை கொரியர் மூலம் பெற்று அதனை விற்று வந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
இதற்கு ஜீவாவும் உறுதுணையாக இருந்துள்ளார். இதனையடுத்து பாலாஜி பாபு மற்றும் ஜீவா ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவர்களை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.





















