![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Arumbakkam Bank Robbery : அரும்பாக்கம் வங்கி கொள்ளை : 4 பேர் கைதான நிலையில் மேலும் ஒருவர் கைது..
சென்னை அரும்பாக்கத்தில் கடந்த வாரம் ஒரு கொள்ளை சம்பவம் நடைபெற்றது.
![Arumbakkam Bank Robbery : அரும்பாக்கம் வங்கி கொள்ளை : 4 பேர் கைதான நிலையில் மேலும் ஒருவர் கைது.. Chennai: Arumbakkam federal bank theft one person arrested in Coimbatore by Special police team Arumbakkam Bank Robbery : அரும்பாக்கம் வங்கி கொள்ளை : 4 பேர் கைதான நிலையில் மேலும் ஒருவர் கைது..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/16/ed074205bd824fceb636f4b272b665071660618932447109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னை அரும்பாக்கத்தில் கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோ தங்க நகைகளில் இதுவரை 15 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் உள்ள ஃபெடரல் வங்கியின் தங்க நகைக்கடன் வழங்கும் கிளையான ஃபேட் பேங்க கோல்டு லோன்ஸ் வங்கி உள்ளது. இந்த வங்கியல்தான் கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது. இங்கு, காவலாளி, ஊழியர்களை கட்டிப்போட்டுவிட்டு தங்க நகைகள், பணம் ஆகியவற்றை கொள்ளை அடித்து சென்றதாக கூறப்பட்டது.
பட்டப்பகலில் 6 பேர் கொண்ட கொள்ளை கும்பல் முகமூடி அணிந்து வந்து கொள்ளையில் ஈடுபட்டதாக தகவல் வெளியான நிலையில், அந்த வங்கியின் ஊழியரான முருகன் என்பவர் தனது கூட்டாளிகளுடன் இணைந்து கொள்ளையில் ஈடுபட்டது காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் முக்கிய குற்றவாளி முருகன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து இருந்தனர்.
இந்நிலையில் கோவையில் மற்றொரு குற்றவாளியான சூர்யா பதங்கியிருந்ததாக தகவல் கிடைத்தது. இதன்காரணமாக தனிப்படை காவல்துறையினர் கோவைக்கு விரைந்தனர். அங்கு அவர்கள் சூர்யாவை மடக்கி பிடித்தனர். அரும்பாக்கம் வங்கி கொள்ளை சம்பவம் தொடர்பாக தற்போது வரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக ஃபேட் பேங்க கோல்டு லோன்ஸ் வங்கியில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கத்தியை காட்டி மிரட்டி மயக்க மருந்தை முகத்தில் அடித்து கொள்ளையில் ஈடுபட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.
மேலும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்கவும் கொள்ளையர்களைப் பிடிக்கவும் போலீசார் தரப்பில் நான்கு தனிப்படை அமைக்கப்பட்டு, கொள்ளையில் ஈடுபட்டதாக பாலாஜி என்பவரை போலீசார் கைது செய்தது. ஏற்கனவே சந்தோஷ், சக்திவேல் என மொத்தம் மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளியான முருகனும் கைது செய்யப்பட்டிருந்தார்.
அரும்பாக்கம் கொள்ளை தொடர்பாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ இதுவரை இந்த வழக்கில் மூன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் ஒருவர், முக்கிய குற்றவாளி அவரையும் நம்ம யாருன்னு கண்டுப்பிடிச்சுடோம். அடுத்து அவரையும் நாங்க விசாரிக்க இருக்கிறோம். இன்னும் இந்த வழக்கு தொடர்பா 3, 4 பேர் இருக்காங்க. அவங்களையும் விரைவில் நாங்க கைது செய்வோம்.
அநேகமாக இன்னும் 3 நாட்களில் கண்டுபிடிக்கப்பட்ட 18 கிலோ தங்க நகைகளோடு, மீதமுள்ள நகைகளையும் மீட்போம். கொள்ளையடித்த நபர்கள் கொள்ளைக்கு பிறகு தனிதனியா பிரிந்து சென்று விட்டார்கள். சம்பவம் நடந்து 20 நிமிடங்களுக்கு பிறகே காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. வங்கிக்கு உள்ளே இருந்த ஊழியர்கள் சத்தமிட்டு தகவல் கொடுக்க முயற்சி செய்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே நமக்கு தகவல் கிடைத்தது. முழுமையான விசாரணைக்கு பிறகு அனைத்தும் தெரிய வரும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)