மேலும் அறிய
Advertisement
சென்னையில் ஓடும் காரில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு - மதுபோதையில் இருந்த பெண்ணை மடக்கி பிடித்த போலீஸ்
’’காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அந்த மூன்று இளைஞர்களில் இருவர் அந்தப் பெண்ணிற்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள்’’
சென்னை நுங்கம்பாக்கத்தில் சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது அந்த காரில் இருந்த பெண் ஒருவர் திடீரென கூச்சலிட்டுள்ளார். நீண்ட நேரமாக அந்தப் பெண் காரில் இருந்து கூச்சலிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவ்வழியாக சென்றவர்கள் அருகில் இருந்த காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பொதுமக்கள் அளித்த தகவலின்படி நுங்கம்பாக்கத்தில், அந்த காரை காவல் துறையினர் விரட்டி மடக்கி பிடித்துள்ளனர். காவல் துறையினர் மடக்கி பிடித்த பொழுது அந்த காரில் இருந்த 3 இளைஞர்கள் இருந்துள்ளனர். இதனையடுத்து காரில் இருந்தவர்களை விசாரிப்பதற்காக இறங்குமாறு தெரிவித்துள்ளனர். அந்த காரை ஒரு இளைஞர் ஓட்டி வந்துள்ளார், முன்புறம் ஒரு இளைஞர் அமர்ந்து வந்துள்ளார். பின்புறம் இருக்கையில் ஒரு இளைஞர் மற்றும் ஒரு பெண் அமர்ந்து வந்துள்ளனர்.
பின்புறம் அமர்ந்து வந்த பின்தான் கூச்சலிட்டு வந்துள்ளார். கூச்சலிட்ட பெண் மதுபோதையில் இருந்த நிலையில், இளைஞர்களில் ஒருவர் அந்த பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்துள்ளது. மேலும், அப்பெண்ணை காரில் இருந்து இறங்குமாறு காவல்துறையினர் கூறியபோது, மதுபோதையில் இளம்பெண் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனை தொடர்ந்து மது போதையில் இருந்த பெண்ணை காவல்துறையினர் சமாதானம் செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அதேபோல மூன்று இளைஞர்களையும் விசாரணைக்காக காவல் துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அந்த மூன்று இளைஞர்களில் இருவர் அந்தப் பெண்ணிற்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள் என தெரியவந்துள்ளது. காரில் எதற்காக அந்த பெண் கூச்சலிட்டார் பாலியல் ரீதியான தொந்தரவு அந்த பெண்ணுக்கு கொடுக்கப்பட்டதா என்ற கோணத்தில் தற்பொழுது காவல்துறையினர் இளைஞர்கள் மற்றும் அந்தப் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் நுங்கம்பாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
உலகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion