மேலும் அறிய
Advertisement
தனியார் தொலைக்காட்சி பங்குதாரர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை
கடந்த 5 வருடங்களாக வீட்டு வேலை செய்து வரும் கனிமொழி என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக போலீசில் புகார்
சென்னை கொடுங்கையூர் திருவள்ளுவர் நகர் 7வது மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஐசக் லிவிங்ஸ்டன் ( 51). இவர் தனியார் தொலைக்காட்சியில் பங்குதாரராக உள்ளார். இந்நிலையில் நேற்று மாலை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில் கடந்த 28 ஆம் தேதி புத்தக கண்காட்சியில் கலந்து கொண்டு விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து தனது வீட்டிலுள்ளவர்கள் பீரோவில் இருந்த நகைகளை சரி பார்த்த போது பீரோவில் இருந்த 50 சவரன் தங்க நகை மற்றும் 7 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போயுள்ளதாகவும் எனது வீட்டில் கடந்த ஐந்து வருடங்களாக வீட்டு வேலை செய்து வரும் கனிமொழி என்பவர் மீது சந்தேகம் உள்ளதாகவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இது குறித்து கொடுங்கையூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பூட்டை உடைத்து 2 லட்சம் ரூபாய் பணம் 2 சவரன் தங்க நகை கொள்ளை
சென்னை கொடுங்கையூர் எருக்கஞ்சேரி நேரு நகர் பாரதியார் தெரு பகுதியை சேர்ந்தவர் தேன்மொழி 64. இவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். மூவருக்கும் திருமணமாகி மன்னார்குடியில் வசித்து வருகின்றனர். இவரது கணவர் கோபி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் தேன்மொழியின் அப்பா இறந்து முதல் வருட திதிக்காக தேன்மொழி கடந்த சில தினங்களுக்கு முன்பு மன்னார்குடிக்கு சென்றுள்ளார்.
இதனால் தனது வீட்டின் அருகில் வசிக்கும் குடும்ப நண்பரான பாலமுரளி கிருஷ்ணா என்பவரிடம் வீட்டின் சாவியை ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் பால முரளி கிருஷ்ணன் வீட்டை பார்க்க வந்த போது வீட்டின் இரும்பு கதவு மற்றும் மெயின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. இது குறித்து பால முரளி கிருஷ்ணன் வீட்டின் உரிமையாளர் தேன் மொழிக்கு தகவல் தெரிவித்தார் மேலும் கொடுங்கையூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
கொடுங்கையூர் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வீட்டிலிருந்த இரண்டு சவரன் தங்க நகை மற்றும் இரண்டு லட்ச ரூபாய் பணம் காணாமல் போயிருப்பது தெரிய வந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
கிரிக்கெட்
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion