மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
செங்கல்பட்டில் பயங்கரம்.. 2 மாத குழந்தையையும், 5 வயது குழந்தையையும் கிணற்றில் வீசி, தாய் தற்கொலை முயற்சி
திருக்கழுக்குன்றத்தில் குடும்பத்தகராறு காரணமாக இரண்டு பெண் குழந்தைகளை கிணற்றில் வீசி தாய் தற்கொலை முயற்சி..
திருக்கழுக்குன்றத்தில் குடும்பத் தகராறு காரணமாக இரண்டு பெண் குழந்தைகளை கிணற்றில் வீசி தாய் தற்கொலை முயற்சி..
குடும்ப பிரச்சனை
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே குடும்ப தகராறு காரணமாக இரண்டு பெண் குழந்தைகளை கிணற்றில் வீசி தாய் ரேவதி - 28 தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். திருக்கழுக்குன்றம் கிரிவலப் பாதையை சேர்ந்தவர் ரேவதி 28, இவருக்கும் சென்னை போரூர் சேர்ந்த, மேகநாதன் என்பவருக்கும் கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணமாகி 5 வயதில் காவியா என்ற பெண் குழந்தையும், ஹேம பிரியா என்ற 2 மாத குழந்தையும் உள்ள நிலையில் இரண்டாவது பிரசவத்திற்காக ரேவதி திருக்கழுக்குன்றத்தில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்துள்ளார்.
தாயுடன் மகள் வாக்குவாதம்
இந்நிலையில் நேற்று மாலை ரேவதிக்கும் அவரது தாய் கவிதாவிற்கும் வாய் சண்டை ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒரு கட்டத்தில் மனமுடைந்த ரேவதி தனது குழந்தைகளுடன், அங்குள்ள புறவழி சாலை அருகேயுள்ள ஒரு வயல்வெளி கிணற்றில் இரண்டு குழந்தைகளையும் போட்டுவிட்டு தானும் கிணற்றில் குதித்த போது அந்த சத்தம் கேட்டு அவ்வழியே சென்றவர்கள் பார்த்து கிணற்றில், இறங்கி ரேவதியை மட்டும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ரேவதிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
திருக்கழுக்குன்றம் பகுதியில் சோகம்
தகவலறிந்த திருக்கழுக்குன்றம் போலீசார் அங்கு சென்று பார்த்து திருக்கழுக்குன்றம் தீயணைப்புதுறையினரை வரவழைத்து கிணற்றில் வீசப்பட்ட இரு குழந்தைகளையும் தேடி வந்த நிலையில் காவ்யா என்ற 5 வயது குழந்தையை மட்டும் சடலமாக மீட்டனர். மேலும் கிணற்றுக்குள் மூழ்கிய 2 மாத குழந்தையை தீவிரமாக தேடி வருகின்றனர். குடும்பத் தகறாரில் 2 குழந்தைகளை கிணற்றில் வீசி விட்டு தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருக்கழுக்குன்றம் பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Suicidal Trigger Warning..
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தேர்தல் 2024
தமிழ்நாடு
ஜோதிடம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion