மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
தந்தை இருசக்கர வாகனம் வாங்கி தராததால் கோபம்.. விரக்தியில் மகன் எடுத்த விபரீத முடிவு..
நாகராஜ் செங்கல்பட்டு அருகே உள்ள ஆத்தூர் பகுதியில், பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
![தந்தை இருசக்கர வாகனம் வாங்கி தராததால் கோபம்.. விரக்தியில் மகன் எடுத்த விபரீத முடிவு.. chengalpattu singaperumal kovil incident where a student committed suicide due to not buying a two wheeler has caused a stir தந்தை இருசக்கர வாகனம் வாங்கி தராததால் கோபம்.. விரக்தியில் மகன் எடுத்த விபரீத முடிவு..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/02/20d80e309c369c88b4d2fc2178a31236_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நாகராஜ்
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பாரதியார் தெருவில் வசித்து வருபவர் கன்னியப்பன் .இவர். கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி நாகராஜ் (19) ஒரு மகன் உள்ளார் . நாகராஜ் செங்கல்பட்டு அருகே உள்ள ஆத்தூர் பகுதியில், பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
![தந்தை இருசக்கர வாகனம் வாங்கி தராததால் கோபம்.. விரக்தியில் மகன் எடுத்த விபரீத முடிவு..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/02/64e285582eec571e729941dac869e9c8_original.jpg)
இந்நிலையில் மாணவராக நாகராஜ் வீட்டில் திடீரென்று தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து , மறைமலை நகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த, மறைமலைநகர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
![தந்தை இருசக்கர வாகனம் வாங்கி தராததால் கோபம்.. விரக்தியில் மகன் எடுத்த விபரீத முடிவு..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/02/afad0894783469e70c42ed3ca610c8eb_original.jpg)
இந்நிலையில் தற்கொலை செய்துகொண்ட மாணவர் தனகு இருசக்கர வாகனம் வாங்கி தரவேண்டுமென, கல்லூரியில் சேர்ந்ததில் இருந்து பெற்றோரிடம் அடம்பிடித்து வந்ததாக கூறப்படுகிறது. இருந்தும் வறுமை நிலை குறித்து பெற்றோர் எடுத்துக்கூறியும், மாணவர் இரு சக்கர வாகனம் வாங்கி தரவேண்டுமென பெற்றோரிடம் சண்டையிட்டு வந்துள்ளார். இந்நிலையில் , சம்பவத்தை அறிந்து மீண்டும் பெற்றோரிடம் சண்டை போட்டதாக தெரிகிறது, இதனால் விரக்தியடைந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
![தந்தை இருசக்கர வாகனம் வாங்கி தராததால் கோபம்.. விரக்தியில் மகன் எடுத்த விபரீத முடிவு..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/02/f33136861c0dfc48a6d165305c5e1b6c_original.jpg)
இருசக்கர வாகனம் வாங்கிக் வாங்கிக் கொடுக்காத காரணத்தினால் மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மாணவன் தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் இருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
![தந்தை இருசக்கர வாகனம் வாங்கி தராததால் கோபம்.. விரக்தியில் மகன் எடுத்த விபரீத முடிவு..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/02/2d2a498ad12a5ed2e473b158b8b01ab3_original.jpg)
இது குறித்து காவல்துறையினரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக தற்போது விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், முதற்கட்ட விசாரணையில் மாணவன் தற்கொலைக்கு இருசக்கர வாங்கிக் கொடுக்காமல் இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம் என தெரிவித்தனர். இருந்தும் இதுகுறித்த சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், மாணவியின் தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
Suicidal Trigger Warning
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060). Poi
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
உலகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion