மேலும் அறிய
Advertisement
Pocso On Sivashankar | சிவசங்கர் பாபாவை மேலும் ஒரு போக்சோ வழக்கில் கைது செய்தது சிபிசிஐடி போலீஸ்..!
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவை மேலும் ஒரு போக்சோ வழக்கில் கைது செய்துள்ளனர் சிபிசிஐடி போலீஸார்
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளராக இருந்து வந்த சிவசங்கர் பாபா அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கு கடந்த 13 ஆம் தேதி சென்னை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. முன்னாள் மாணவிகள் பலர் புகார் அளித்த நிலையில் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு டெல்லியில் கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்ட சிவசங்கர் பாபாவிற்கு திடீரென்று உடல்நிலை குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து சிவசங்கர் பாபா தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்து வந்த சிவசங்கர் பாபா சிகிச்சையில் இருந்து நலம் பெற்ற பிறகு சிவசங்கர் பாபாவை புழல் சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து சிவசங்கர் பாபாவை 3 நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிவசங்கர் பாபாவிடம் இருந்து பல திடுக்கிடும் வாக்குமூலங்களை சிபிசிஐடி போலீசார் பெற்றிருந்தனர்.
இந்நிலையில் சிவசங்கர் பாபா மீதான மூன்றாவது வழக்கை போக்சோ பிரிவின் கீழ் மாற்ற சிபிசிஐடி போலீசார் ஆலோசனை நடத்தி வந்தது . 3 வழக்குகளில் 2 வழக்கு போக்சோவில் பதிவான நிலையில் சட்ட வல்லுநர்களுடன் சிபிசிஐடி ஆலோசனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து சிவசங்கர் பாபா அளித்த வாக்குமூலம் மற்றும் சட்ட வல்லுனர்களின் பரிந்துரையின் அடிப்படையில் சிவசங்கர் பாபாவின் மீது தற்போது மூன்றாவது போக்சோ பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 18 முன்னாள் மாணவிகள் புகார் அளித்துள்ள நிலையில் 2 போக்சோ வழக்கில் மட்டும் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு சென்னை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். புழல் சிறையில் இருக்கும் சிவசங்கர் பாபாவை மீண்டும் சென்னை சிபிசிஐடி போலீசார் கைது செய்ததை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா செங்கல்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்னிலையில், மாணவிகள் குற்றச்சாட்டு குறித்து ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, முன்னதாக நடத்தப்பட்ட விசாரணையில் சிவசங்கர் பாபா பல ஆண்டுகளாக ஆபாசமாக சாட் செய்து, பயன்படுத்தி வந்த யாஹூ ஈமெயில் முடக்கப்பட்டது. சுஷில் ஹரி இன்டெர்நேஷனல் பள்ளி ஈமெயில் முகவரி மூலம் சிவசங்கர் பாபா மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசி வந்ததற்கான ஆதாரமும் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
உலகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion