மேலும் அறிய
Advertisement
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - விசிக நிர்வாகி போக்சோவில் கைது
தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தமிழ் ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த லத்தூர் ஒன்றிய செயலாளரும், தமிழ் ஆசிரியருமான மணிமாறனை கைது செய்யக்கோரி பொதுமக்கள், மதியம் சாலை மறியல் போராட்டம் நடத்தியதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, மாமல்லபுரம் மகளிர் போலீசார் சிறையில் அடைத்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றுபவர் மணிமாறன். இவர் எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியிடம் நேற்று முன்தினம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து பெற்றோர் நேற்று காலை பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர்.
பள்ளி நிர்வாகம் ஆசிரியர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்காததால் பெற்றோர் கல்பாக்கம் காவல் நிலையத்தில் தகவல் அளித்து, பின்னர் சென்னை புதுச்சேரி, கிழக்கு கடற்கரை சாலையில் உறவினர்கள் மற்றும் கிராம மக்களோடு இணைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாமல்லபுரம் டிஎஸ்பி ஜெகதீஸ்வரன் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி ஆசிரியர் மணிமாறனை கைது செய்து மாமல்லபுரம் மகளிர் காவல்நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தற்காலிகமாக சாலை மறியல் கைவிடப்பட்டுள்ளது. இவர் லத்தூர் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து, பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மாமல்லபுரம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, தமிழ் ஆசிரியரும் மணிமாறனை சிறையில் அடைத்தனர்.
இது குறித்து காவல்துறையினர் தொடர்பு கொண்டு கேட்டபோது, பள்ளி அருகே பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என கூறினர். உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுத்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
India 75: இந்தியா 75 : ஓவிய கலையில் சிறந்து விளங்கிய இந்திய கலைஞர்கள்..
‘க்யூ ஆர்’ மோசடி.. பணம் அனுப்புகிறார்களா உஷார்.. முன்னாள் ஊர்காவல் படை ஊழியர் கைதான பின்னணி..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
உலகம்
சேலம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion