மேலும் அறிய
Advertisement
சென்னை அருகே பிடிபட்ட துப்பாக்கிகள்; கொத்துக்கொத்தா தோட்டாக்கள - பின்னணியில் நடந்தது என்ன ?
பண்ணை வீட்டில் பார்ட்டி என்று கூறிக் கொண்டு, திருப்போரூர் அருகே துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
" போலீசார் தேடுதல் வேட்டை"
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த இள்ளலூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்டுமான பணிகளுக்காக கொண்டுவந்த சுமார் 3 டன் இரும்பு கம்பி காணாமல் போனதாக திருப்போரூர் காவல் நிலையத்தில் குமார் என்பவர் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து திருப்போரூர் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
"காக்கை அமர்ந்து பனம்பழம் விழுந்த கதையாய் "
அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சென்னை பதிவெண் கொண்ட கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த திருப்போரூர் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் வெகு நேரமாக நின்று கொண்டிருந்த காரில் இருந்தவர்களிடம் விசாரித்தார். காரை சோதனை செய்தபோது அதில் அதிகளவில் விலை உயர்ந்த மதுபாட்டில்கள் இருந்துள்ளது. பின்னர் அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளார்.
"விலை உயர்ந்த மது பாட்டில்கள்"
காரை சோதனை செய்தபோது அதில் அதிகளவில் விலை உயர்ந்த மதுபாட்டில்கள் இருந்துள்ளது. பின்னர் அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளார். இதில், முட்டுக்காடு பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக மீன்பிடி உபகரணங்களை விற்பனை செய்யும், தொழில் செய்துவரும் முட்டுக்காடு பகுதியை சேர்ந்த பிரித்திவிராஜ் என்பதும், அவரது நண்பரான மைசூர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பதும் தெரியவந்தது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் இருந்து உயர் ரக மதுபானங்கள் மற்றும் துப்பாக்கிகள், தோட்டாக்கள் வாங்கி வந்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளனர். செங்காடு கிராமத்தை சேர்ந்த வசந்த், முட்டுக்காடு பகுதியை சேர்ந்த பிரித்திவிராஜ், மைசூரை சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.
" துப்பாக்கி, கஞ்சா ,தோட்டா"
சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், Maruti swift and Maruti Alto என்ற இரண்டு கார்களில் வந்ததாகவும், அவர்கள் வந்த கார் இல்லலூர் பெரியார் நகர், காப்புகாடு பகுதியில் இருப்பதாகவும் கூறிவுள்ளார்கள். இதனடிப்படையில், மேற்படி இடத்திற்கு சென்று அங்கிருந்த இரு கார்களை சோதனை செய்ததில், அதிலிருந்து உரிமம் இல்லாத துப்பாக்கிகள் ,Double Barrel Gun-1, 0.22 துப்பாக்கி-1, தோட்டாக்கள்-163, வெளிநாட்டு மாதுபாட்டிகள்- 58, கஞ்சா சுமார் 1/2 கிலோ மற்றும் உயர்ரக கை கடிகாரங்கள்-8 ஆகியவற்றை கைப்பற்றப்பட்டது.
மேலும், இதில் சம்மந்தப்பட்ட பிரித்திவிராஜ் என்பவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் , முட்டுகாடு அருகில் உள்ள பிரித்திவிராஜ் வீட்டின் பின்புற தோட்டத்தில் இருந்து Air Gun-1, Arrow Gun-1 ஆகியவற்றை கைப்பற்றி எதிரிகள் மற்றும் கைப்பற்றபட்ட பொருட்களின் அடிப்படையில், திருப்போரூர் காவல் நிலையத்தில் உரிமம் இல்லாமல் ஆயுதங்கள், தடைசெய்யப்பட்ட கஞ்சா மற்றும் மதுபாட்டில்கள் வைத்திருந்தற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் 30 லட்சம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"சந்தேகத்தை ஏற்படுத்தும் துப்பாக்கிகள்"
அப்பகுதியில் கடந்த மூன்று நாட்களாகவே துப்பாக்கிச் சுடும் சத்தம் போன்று ஏதோ கேட்டதாக கூறப்படுகிறது. ஒருவேளை இந்த துப்பாக்கி வைத்து சம்பந்தப்பட்ட நபர்கள் பயிற்சியில் ஈடுபட்டார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதேபோல் திருப்போரூர் காட்டுப்பகுதியில் இருக்கும் மான் வேட்டைக்கு பயன்படுத்த இந்த துப்பாக்கிகள் கொண்டுவரப்பட்டதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்ட பத்திரிகை செய்தி குறிப்பில், துப்பாக்கிகள் எதற்கு கொண்டுவரப்பட்டது என்பது குறித்த தகவல்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. துப்பாக்கிகள் பிடிக்கப்பட்ட தகவல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion