மேலும் அறிய

Crime: நீதிமன்ற வாசலில் பயங்கரம்.. அச்சத்தில் செங்கல்பட்டு மக்கள் - நடந்தது என்ன..?

செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வாசலில் வைத்து , குற்றவாளி ஒருவரை நாட்டு வெடி வீசி வெட்டிக் கொலை முயற்சி.

செங்கல்பட்டு (Chengalpattu News ) : செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றம், சென்னை புறநகரில் அமைந்துள்ள மிகப்பெரிய நீதிமன்றங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த நீதிமன்ற வளாகத்திற்குள் 12க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. வேலை நாட்களில் எப்பொழுதும் செங்கல்பட்டு நீதிமன்றம் பரபரப்பு உடனே காணப்படும். இந்த நிலையில் இன்று காலை செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வாசலில் அமைந்துள்ள, கடையில் டீ-குடித்து கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர் மீது, 3 இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத, மர்ம நபர்கள் 6 பேர் கொண்ட கும்பல், நாட்டு வெடி வீசி சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர் . இதுகுறித்து, தகவலறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் ப்ரனீத் தலைமையில், நீதிமன்ற வளாகத்தில் பதட்டத்தை தணிக்க 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்கு ஈடுபட்டனர். வெட்டுப்பட்ட  நபரை, மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஆபத்தான நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
 குட்டி ரவுடி லோகேஷ்
 
கொலை முயற்சி செய்யப்பட்ட நபர் குறித்து போலீசார் விசாரணை செய்ததில், சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்த லோகேஷ் (28) என்பதும் இவர் மீது சென்னை புறநகர் பகுதியில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. லோகேஷ் மீது கூடுவாஞ்சேரி, ஓட்டேரி, பீர்க்கங்கரணை ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.
 
 கொலைக்கு கொலை பழிக்கு பழி
 
லோகேஷ் 2015 ஆம் ஆண்டு தனது அண்ணன், பாஸ்கி என்கிற பாஸ்கரன் மற்றும் தாம்பரம் இரும்புலியூர் பகுதியைச் சேர்ந்த பாலாஜி ஆகியோருடன் இணைந்து, கிரிக்கெட் விளையாடிய போது ஏற்பட்ட மோதலில், லோகேஷ், பாஸ்கரன் இணைந்து பாலாஜியை கொலை செய்துள்ளனர். இதனை அடுத்து 2016 ஆம் ஆண்டு பாலாஜி நண்பர்கள் சிலர், லோகேஷின், சகோதரர் பாஸ்கரை கொலை செய்துள்ளனர். தன் அண்ணனை கொலை செய்த நபர்களை பழிவாங்க பல முறை லோகேஷ் திட்டம் திட்டி உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு கூடுவாஞ்சேரி அருகே, அண்ணனை கொலை செய்தவர்களை கொலை செய்ய முயற்சி செய்த பொழுது அவர்கள் தப்பியுள்ளனர்.
 
 தனிப்படை அமைத்து விசாரணை
 
இந்தநிலையில் , தனது சகோதரர் பாஸ்கர் கொலை வழக்கில் சாட்சி சொல்வதற்காக இன்று காலை தனது நண்பருடன் செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். அப்போது நீதிமன்றம் அருகே டீக்கடையில் டீ குடித்து கொண்டிருக்கும் போது, 3 இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் லோகேஷை, நாட்டு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் சரமாரியாக வெட்டியும் தப்பியோடி விட்டனர். லோகேஷ் தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். இருப்பினும் கவலைக்கிடாக இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து செங்கல்பட்டு நகர போலீசார் பல்வேறு பிரிவின்கில் வழக்கப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay  : ”நேர்ல வர முடியாதா விஜய்? CM சீட் மட்டும் வேணுமா!” திட்டித் தீர்க்கும் மக்கள்DMK Cadre vs Women : நிவாரணம் வழங்கிய உதயநிதி! முண்டியடித்து வந்த பெண்கள்..அத்துமீறிய திமுக நிர்வாகிAnnamalai vs ADMK: இரண்டாக உடையும் அதிமுக?அண்ணாமலையின் புது ரூட்! கலக்கத்தில் EPSTiruvannamalai Landslide : ”ஒரு SECOND தான் மொத்தமா புதைஞ்சிருப்போம்” மண்சரிவில் தப்பிய பெண் திக்திக்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
Shalini Ajith: ரேஸ் கார் ஓட்டிய ஷாலினி! தல-யை பார்த்து என்ன சொன்னாங்க தெரியுமா? அஜித்தின் தோழி பகிர்ந்த தகவல்!
Shalini Ajith: ரேஸ் கார் ஓட்டிய ஷாலினி! தல-யை பார்த்து என்ன சொன்னாங்க தெரியுமா? அஜித்தின் தோழி பகிர்ந்த தகவல்!
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
Embed widget