மேலும் அறிய
Advertisement
Crime : ஹலோ.. அந்த விஷயத்துக்கு பொண்ணு இருக்கா.. முன்விரோதத்தால் செய்த கொடூரம்.. அதிரடியாக கைதுசெய்த போலீசார்
"டிவிட்டரில் போலி கணக்கு மூலம், உடலுறவுக்கு பெண்கள் தேவைப்பட்டால் தொடர்புகொள்ளவும் என ட்வீட் போட்ட நபர் கைது"
உள்ளாட்சி மன்ற தேர்தலில் தோல்வி அடைந்ததால் வெற்றி பெற்றவரின் மகனின் எண்ணை பதிவிட்டது போலீசார் விசாரணையில் அம்பலம்
பல்வேறு எண்களில் இருந்து அழைப்புகள்
செங்கல்பட்டு ( Chengalpattu News ) : செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கீழவலம் பகுதியைச் சேர்ந்தவர் நித்தியானந்தம் (33). இவரது செல்போன் எண்ணிற்கு அடிக்கடி மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியும், பாலியல் உறவு கொள்ள பெண்கள் வேண்டும் என புதுப்புது எண்களில் இருந்து நச்சரித்து வந்துள்ளனர். இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த நித்தியானந்தம், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், உள்ள சைபர் பிரிவில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் நித்தியானந்தத்திற்கு, செல்போன் மூலம் தொல்லை கொடுத்த எண்களை கண்டறிந்து அவர்களிடம் தொலைபேசி மூலம் பேசி விசாரணை நடத்தினர்.
காவல்துறையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி
அதில் பேசிய நபர்கள் நித்தியானந்தத்தின் செல்போன் எண்ணை சமூக வலைதளமான டிவிட்டரில் (Twitter) உள்ள ஒரு கணக்கில் பாலியல் உறவு கொள்ள பெண்கள் தேவைப்பட்டால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் என போடப்பட்டு இருந்ததாகவும், அதன்படி ஃபோன் செய்ததாகவும் கூறினர். தொடர்ந்து குறிப்பிட்ட டிவிட்டர் கணக்கை ஆய்வு செய்தபோது அது கீழவலம் பகுதியைச் சேர்ந்த கஜபதி என்பவரின் போலி கணக்கு என தெரியவந்தது.
பழிக்கு பழி வாங்க நூதன வேலை
தொடர்ந்து கஜபதியை கைது செய்த சைபர் கிரைம் போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், நடைபெற்று முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் கீழவலம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிக்கு கஜபதி மற்றும் நித்தியானந்தத்தின் தாய் இருவரும் போட்டியிட்டு உள்ளனர். இதில் நித்தியானந்தத்தின் தாய் வெற்றி பெற்றதால், இருவருக்கும் இடையே பகை ஏற்பட்டுள்ளது. இதனால் நித்தியானந்தத்தை பழி வாங்க டிவிட்டரில் போலி கணக்கை துவங்கி அதில் பாலியல் உறவுக்கு பெண்கள் தேவைப்பட்டால் இந்த எண்ணிற்கு அழைக்கவும் என நித்தியானந்தத்தின் செல்போன் எண்ணை பதிவிட்டதை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து கஜபதி மீது வழக்கு பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் அவரை செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். தேர்தல் முன்விரோதம் காரணமாக நடைபெற்ற இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
சென்னை
தேர்தல் 2024
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion