மேலும் அறிய
Advertisement
"அய்யய்யோ இங்க கொலை நடந்திருக்கு " ...போலீசை ஓடவிட்ட போதை ஆசாமியின் கதை
செங்கல்பட்டில் ஒருவரை கொலை செய்ததை நேரில் பார்த்ததாக புரளியை கிளப்பி போலீசாரை பதட்டமாக்கி ஓடவிட்ட போதை ஆசாமி.
செங்கல்பட்டு நகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியான செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள இரயில்வே மேம்பாலத்தின் கீழே மூன்று பேர் சேர்ந்து ஒருவரை துண்டு துண்டாக வெட்டி கொன்றதாக செங்கல்பட்டு நகர காவல்நிலையத்திற்கு நேரடியாக சென்ற ஒரு போதை ஆசாமி தகவல் சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அதனை நம்பி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நாலாபுறமும் தேடி பார்த்தும் எதுவுமில்லை என வந்து அவரவர் வேலையை பார்த்தனர்.
அதன்பிறகு அதே போதை ஆசாமி நேரடியாக செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சென்று இதே தகவலை கூறியுள்ளார். எஸ்.பி அலுவலகத்தில் இருந்து காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணனை தொடர்பு கொண்டு இதே சம்பவத்தை கூறியுள்ளனர். உடனே தகவல் சொன்ன போதை ஆசாமியை அலேக்காக தூக்கிக்கொண்டு காவல் ஆய்வாளர் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் 10க்கும் மேற்பட்ட போலீசார் கொலை நடந்ததாக சொன்ன இடத்தை நேரில் காண்பிக்க சொல்லியுள்ளனர்.
போதை ஆசாமி இங்குதான் மூன்று பேர் சேர்ந்து ஒருநபரை துண்டு துண்டாக வெட்டியதை என் இரண்டு கண்ணால் பார்த்தேன் என கூறினார். ஆய்வாளர் அவரிடம் கொலை செய்திருந்தால் ரத்தம் சிந்தியிருக்குமே. ரத்தத்தை காணொமே என போதை ஆசாமியிடம் கேட்டபிறகுதான். வடிவேலுவின் கிணத்தை காணோம் காமெடிபோல். மூன்று பேர் சேர்ந்து ஒருநபரை துண்டு துண்டாக வெட்டி கொன்றதை என் இரண்டு கண்ணால் பார்த்தேன். ஆனால் வெட்டிய நபர்களையும் காணும்.. வெட்டுபட்ட நபரையும் காணும்.. ரத்தத்தையும் காணும். எப்படியென்றே தெரியவில்லை. ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருக்கிறது என காவல் துறையினரையே திரும்ப கேள்வி கேட்டுவிட்டு அப்பாவிபோல போதை ஆசாமி நின்றார். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரை பற்றி விசாரித்த போது செய்யாறு பகுதியை பூர்விகமாக கொண்ட கார்த்திக் (36) என்பதும் செங்கல்பட்டு நத்தம் பகுதியில் வாடகை வீட்டில் தன் மனைவியுடன் வசித்து வருவதும் தெரியவந்தது.
மீண்டும் மீண்டும் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி மூன்று பேர் ஒருவரை வெட்டியதை கண்ணால் பார்த்தேன் என ஆணித்தணமாக சொல்லி மூன்று பேரையும் என்னால் அடையாளம் காட்ட முடியும் என கூறுகிறார். போலீசார் சம்பவம் நடந்ததற்கான எந்தவித அறிகுறியும் இல்லை அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என காவல்துறை தரப்பில் அவர்களது தீவிர விசாரணைக்கு பின் கூறுகின்றனர். மேலும் போதை ஆசாமியின் புரளியால் போலீசார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பாகவும், பதட்டமாகவும் காணப்பட்டனர்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
க்ரைம்
இந்தியா
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion