மேலும் அறிய
Advertisement
ரூ. 100 திருப்பி கொடுக்காத ஸ்டேட் பேங்க்.. அலட்சியப்படுத்திய அதிகாரிகள்! - அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்
வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி, நஸ்ட ஈடாக 50000, வழக்கு விசாரணைக்காக நடைபெற்ற 15 ஆயிரம் ரூபாய் சேர்த்து 65 ஆயிரம் ரூபாய் சம்பந்தப்பட்ட நபருக்கு கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் சேர்ந்தவர் நிர்மல் குமார். இவர் சென்னை சௌகர்பேட்டை பகுதியில் , ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில், நண்பர் ஒருவருக்கு நேரடியாக சென்று 900 ரூபாய் பணத்தை டெபாசிட் செய்ய ரசீது மூலம் கொடுத்து கட்டி உள்ளார். இதற்கு ஆயிரம் ரூபாயை அவர் கொடுத்துள்ளார்.
இந்த மீதி பணம் 100 ரூபாய் கேட்கும் பொழுது, ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்து விட்டதாக கூறியுள்ளனர். இதனால் நிர்மல் குமார் தனக்கு மீதி சில்லறை 100 ரூபாய் தர வேண்டும் என வங்கி மேனேஜரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் அந்த புகாரை வங்கி மேனேஜர் தட்டிக் கழித்துள்ளார். இதனை அடுத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் சர்குலர் ஆபீஸ் சென்று, இதுகுறித்து புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்துள்ளது. இதனை அடுத்து மும்பை அலுவலகத்தில் சென்று புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்துள்ளது.
இதனால் பாதிக்கப்பட்டு மன உளைச்சலில் இருந்த நிர்மல் குமார், செங்கல்பட்டு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி, நஷ்ட ஈடாக 50000, வழக்கு விசாரணைக்காக நடைபெற்ற 15 ஆயிரம் ரூபாய் சேர்த்து 65 ஆயிரம் ரூபாய் சம்பந்தப்பட்ட நபருக்கு கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதுகுறித்து பாதிப்படைந்த நிர்மல் குமார் கூறுகையில், ”வங்கி ஊளியர்கள் இதுபோன்று நடந்து கொண்டது சரியல்ல. எனவே வழக்கு தொடர்ந்தேன். ஆனால் சாதாரண மக்கள் என்ன செய்வார்கள் என தெரியவில்லை, வங்கி அதிகாரிகளும், வங்கியும் நியாயப்படி நடக்க வேண்டும்” என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
இந்தியா
தமிழ்நாடு
ஆன்மிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion