மேலும் அறிய
Advertisement
Kanchipuram: செல்போனை மூட்டையில் அள்ளிச் சென்ற கொள்ளையர்கள்..! அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..!
Sunguvarchatram: சுங்குவார்சத்திரம் பகுதியில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து ரூ.53 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை.
சுங்குவார்சத்திரம் பகுதியில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து ரூ 53 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டது. செல்போன்களை மூட்டை கட்டி ஆட்டோவில் எடுத்துச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் (Kanchipuram News): காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த மொளச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரஹீம். இவர் சுங்குவார்சத்திரம் பஜாரில் செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டி கொண்டு சென்றுள்ளார். இதையடுத்து மறுநாள் காலை கடையை திறக்க வந்த போது கடையின் முன்பக்க ஷட்டர் உடைக்கப்பட்டிருந்தது.
ரூ.53 லட்சம் மதிப்பிலான செல்போன்கள்
உள்ளே சென்று பார்த்ததில் கடையில் இருந்த ஆப்பிள், ரெட்மி, ரியல்மீ, சாம்சங், விவோ போன்ற ரூபாய் ரூ.53 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. பின்னர் இதுகுறித்து உடனடியாக அப்துல் ரஹீம் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
அதிரவைத்த சிசிடிவி காட்சி
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் ஆட்டோவில் வந்த மூன்று மர்ம நபர்கள் இரும்பு ஆயுதத்தின் மூலம் ஷட்டரை உடைப்பதும், பின்னர் இருவர் முகத்தை மறைத்துக் கொண்டு உள்ளே சென்று கடையில் உள்ள செல்போன்களை கோணி பையில் மூட்டை கட்டி ஆட்டோவில் எடுத்துச் செல்வது பதிவாகி இருந்தது. மேலும் இதுகுறித்து அப்துல் ரஹீம் அளித்த புகாரின் பேரில் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து வெளியாகி உள்ள சிசிடிவிகளில் அடிப்படையில் வைத்து பார்க்கும் பொழுது, திருட வந்த நபர்கள் ஏற்கனவே இந்த பகுதிக்கு நன்கு அறிமுகமானவர்கள் போல நடந்து கொண்டிருப்பதாகவும், இந்த காட்சிகள் அடிப்படையில் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
அரசியல்
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion