பாம் ரவி கொலையில் பிரான்ஸ்சில் இருந்து பண உதவி செய்யப்பட்டதா? - போலீஸ் விசாரணையில் திடீர் திருப்பம்
புதுச்சேரியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் பிரான்சு நாட்டில் இருந்து கொலையாளிகளுக்கு பண உதவி, கொலை வழக்கு தொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் பிரான்சு நாட்டில் இருந்து கொலையாளிகளுக்கு பண உதவி செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. அத்துடன் கொலை வழக்கு தொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி வாணரப்பேட்டை தாவீதுபேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி பாம் ரவி (33). இவர் மீது கொலை, வெடிகுண்டு உள்ளிட்டவை தொடர்பாக 34 வழக்குகள் உள்ளன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
இதற்கிடையே கடந்த 24 ஆம் தேதி பாம் ரவி, அவரது ஆதரவாளரான வாணரப்பேட்டை நேரு வீதியை சேர்ந்த ஒப்பந்ததாரர் அந்தோணியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் பாம் ரவி, அந்தோணி மீது வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்தார். இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சிறையில் இருந்த வினோத் தனது கூட்டாளிகள் மூலம் பாம் ரவி மற்றும் அவரது ஆதரவாளரை தீர்த்துக்கட்டியது தெரிய வந்தது. காஞ்சிபுரத்தை சேர்ந்த கூலிப்படை தலைவன் தியாகு என்பவருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து இந்த கொலைக்கு பணம், ஆயுதம் கொடுத்து உதவியதாக வினோத் தாயார் ரமணி, பிரகாஷ், சந்துரு, நவீன், ராஜேஷ், அரவிந்தன் ஆகியோரை ஏற்கனவே கைது செய்தனர். மேலும் நேற்று முன்தினம் சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் வாணரப்பேட்டை அருண், கடலூர் ரெட்டிச்சாவடி பிரவீன் ஆகியோர் சரணடைந்தனர். இதற்கிடையே கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்தன், நவீன் ஆகியோரை நேற்று போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள். இதில் பாம்ரவி கொலைக்கு உதவியதாக வேல்ராம்பேட் சேரன் வீதியை சேர்ந்த மோகன் (21), எம்.ஜி.ஆர்.நகர் மாணிக்கம் (22), நைனார்மண்டபம் சூர்யா (25) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து மோகன், மாணிக்கம், சூர்யாவை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கத்தி, ஸ்கூட்டரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதற்கிடையே பாம் ரவியை கொலை செய்ய பிரான்சு நாட்டில் இருந்து ஒருவர் பண உதவி செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அந்த நபரையும் வழக்கில் சேர்க்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் விசாரணை முடிந்து அரவிந்தன், நவீன் ஆகியோரயைும் போலீசார் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்