மேலும் அறிய

கடனை திருப்பி கேட்ட கொத்தனார்.. கழுத்தை நெரித்து கொலை செய்த சித்தாள் - சீர்காழியில் பரபரப்பு..!

சீர்காழியில் கடனை திருப்பி கேட்ட கொத்தனாரை படம் பார்க்க அழைத்து வந்து கையை கட்டி போட்டு கழுத்தை நெரித்து கொலை செய்த சித்தாள் கைது செய்யப்பட்டுள்ளார்.  

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தேர் மேல வீதியில் சாலையோரம் கடந்த ஜுலை மாதம் 30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து சீர்காழி  காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் இறந்தவர் மயிலாடுதுறை, சீனுவாசபுரம், திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த 50 வயதான முருகன் என்பதும், அவர் கொத்தனார் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் முருகன் கொலை செய்யப்பட்டு இறந்தது தெரியவந்தது. 

கடனை திருப்பி கேட்ட கொத்தனார்.. கழுத்தை நெரித்து கொலை செய்த சித்தாள் - சீர்காழியில் பரபரப்பு..!

சிக்கிய சித்தாள்:

மேலும் முருகன் சீர்காழி எவ்வாறு வந்தார்? அவரை கொலை செய்தது யார்? என்று தீவிரமாக காவல்துறையினர் சீர்காழி பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். ஆனால், காவல்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் பழுதால் முருகனை கொலை செய்த நபரை பிடிக்க முடியாமல்  சீர்காழி காவல்துறையினர் திணறி வந்தனர். ஒருவழியாக பிரதான சாலையில் கடை ஒன்றில் வைத்திருந்த சிசிடிவி காட்சியில் பதிவான கொலையாளி முகத்தை வைத்து உறவினர்கள் அளித்த தகவலில் கொலையாளி, முருகனுடன் பணி செய்து வந்த  சித்தாள் என்பது உறுதியானது.   

கடனை திருப்பி கேட்ட கொத்தனார்.. கழுத்தை நெரித்து கொலை செய்த சித்தாள் - சீர்காழியில் பரபரப்பு..!

முதலில்  இது குறித்து சீர்காழி காவல்துறையினர் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து  முதலில் விசாரணை நடத்தி வந்த நிலையில்,  முருகனுடன் ஒரு நபர் சேர்ந்து வருவது போன்ற காட்சி சிசிடிவியில்  பதிவாகி இருந்ததை அடுத்து அந்த நபருக்கு கொலையில் தொடர்பு இருக்ககூடும் என அந்த நபரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் அந்த நபர் கும்பகோணம் பகுதியில் பதுங்கி இருப்பதை அறிந்து உறவினர்கள் கொலையாளியை பிடித்து வந்து  சீர்காழி காவல் நிலையத்தில் ஒப்படைந்தனர். பின்னர் காவல்துறையினர் விசாரணையில் அந்த நபர் சீர்காழி அருகே உள்ள நாங்கூர் பகுதியை சேர்ந்த 26 வயதான ராஜகோபால் என்பதும், இவர் கொத்தனார் முருகனிடம் சேர்ந்து வேலை பார்க்கும் சித்தாள் என்பது தெரியவந்தது.

கடனை திருப்பி கேட்ட கொத்தனார்.. கழுத்தை நெரித்து கொலை செய்த சித்தாள் - சீர்காழியில் பரபரப்பு..!

கடனை திருப்பிக்கேட்ட கொத்தனார்:

மேலும் கொத்தனார் முருகன் கொலை வழக்கு தொடர்பான சிசிடிவி காட்சியில் அவருடன் உள்ள நபர் ராஜகோபால் என்பதை அறிந்த காவல்துறையினர் அவரிடம் தீவிரமாக விசாரணை செய்ததில் கொத்தனார் முருகனை, ராஜகோபால் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.  முருகனிடம் தான்  5 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்ததாகவும், அந்த பணத்தை முருகன் கேட்டுவந்த நிலையில், முருகனை ராஜகோபால் சீர்காழிக்கு படம் பார்க்க போவலாம் என கூறி அழைத்து வந்து திரையரங்கு அருகே உள்ள இடத்தில்  சாலையோரம் அமர்ந்து மது அருந்தியதாகவும், மது போதை அதிகமானதால் மது போதையில் கொத்தனார் முருகனை கையை கட்டி போட்டு கழுத்தை நெரித்து கொலை செய்ததாக காவல்துறையினரிடம் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். 

கடனை திருப்பி கேட்ட கொத்தனார்.. கழுத்தை நெரித்து கொலை செய்த சித்தாள் - சீர்காழியில் பரபரப்பு..!

இதனைத் தொடர்ந்து சீர்காழி போலீசார் கொலைவழக்காக மாற்றி ராஜகோபாலை கைது செய்தனர் . மேலும், சீர்காழி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்த போது ராஜகோபால் தப்பி ஓடிய நிலையில், அவரை துரத்தி சென்ற காவல்துறையினர் காவல் நிலையம் பின்புறம் உள்ள கழுமலையாற்றில் இறங்கி காட்டு பகுதியில் பதுங்கி இருந்த ராஜகோபாலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”மீண்டும் பாஜகவுடன் கூட்டணி சேர EPS முடிவு?” அதிருப்தியில் அதிமுக நிர்வாகிகள்..!
”மீண்டும் பாஜகவுடன் கூட்டணி சேர EPS முடிவு?” அதிருப்தியில் அதிமுக நிர்வாகிகள்..!
Abroad Study: வெளிநாட்டில் படிக்க ஆசையா? இந்த மூன்று விஷயங்களை கவனியுங்கள், இல்லன்னா கஷ்டம்தான்..!
Abroad Study: வெளிநாட்டில் படிக்க ஆசையா? இந்த மூன்று விஷயங்களை கவனியுங்கள், இல்லன்னா கஷ்டம்தான்..!
Crime: சாப்பாடு போட மறுத்த மனைவி! கழுத்தை நெரித்துக் கொலை செய்த கணவன்!
Crime: சாப்பாடு போட மறுத்த மனைவி! கழுத்தை நெரித்துக் கொலை செய்த கணவன்!
Breaking News LIVE 11th NOV : தமிழ்நாட்டில் இன்று முதல் நவ.15ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு
Breaking News LIVE 11th NOV : தமிழ்நாட்டில் இன்று முதல் நவ.15ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS ADMK Alliance | ”பாஜகவுக்கு NO சொன்ன EPS” விஜய்க்கு ஸ்ட்ரிக்ட் கண்டிஷன்!முதல்வர் வேட்பாளர் யார்?Delhi Ganesh | IND-PAK போரால் சினிமா ENTRY! விமானப்படையில் 10 ஆண்டுகள்! டெல்லி கணேஷ்-ன் சுவாரஸ்ய கதைSalem Doctor fight | Govi Chezhian | ஓரங்கட்டப்பட்ட கோவி செழியன்? Udhayanidhi கொடுத்த வார்னிங்! தஞ்சை திமுக பரபரப்பு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”மீண்டும் பாஜகவுடன் கூட்டணி சேர EPS முடிவு?” அதிருப்தியில் அதிமுக நிர்வாகிகள்..!
”மீண்டும் பாஜகவுடன் கூட்டணி சேர EPS முடிவு?” அதிருப்தியில் அதிமுக நிர்வாகிகள்..!
Abroad Study: வெளிநாட்டில் படிக்க ஆசையா? இந்த மூன்று விஷயங்களை கவனியுங்கள், இல்லன்னா கஷ்டம்தான்..!
Abroad Study: வெளிநாட்டில் படிக்க ஆசையா? இந்த மூன்று விஷயங்களை கவனியுங்கள், இல்லன்னா கஷ்டம்தான்..!
Crime: சாப்பாடு போட மறுத்த மனைவி! கழுத்தை நெரித்துக் கொலை செய்த கணவன்!
Crime: சாப்பாடு போட மறுத்த மனைவி! கழுத்தை நெரித்துக் கொலை செய்த கணவன்!
Breaking News LIVE 11th NOV : தமிழ்நாட்டில் இன்று முதல் நவ.15ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு
Breaking News LIVE 11th NOV : தமிழ்நாட்டில் இன்று முதல் நவ.15ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு
CJI Sanjiv Khanna: இன்று பதவியேற்கிறார் உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி - யார் இந்த சஞ்சீவ் கண்ணா?
CJI Sanjiv Khanna: இன்று பதவியேற்கிறார் உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி - யார் இந்த சஞ்சீவ் கண்ணா?
TN Rain Update: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை? சென்னையில் இடி, மின்னலுடன்.. வானிலை அறிக்கை
TN Rain Update: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை? சென்னையில் இடி, மின்னலுடன்.. வானிலை அறிக்கை
MG Mifa 9 MPV: ஆத்தி எத்தா தண்டி..! 5.2மீ நீளத்தில் எம்ஜி மின்சார மிஃபா 9 கார் - கொட்டிக் கிடக்கும் அம்சங்கள்
MG Mifa 9 MPV: ஆத்தி எத்தா தண்டி..! 5.2மீ நீளத்தில் எம்ஜி மின்சார மிஃபா 9 கார் - கொட்டிக் கிடக்கும் அம்சங்கள்
Israeli PM:
Israeli PM: "ஆமா, நாங்க தான் 40 பேர கொன்னோம்” - பேஜர் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற இஸ்ரேல் பிரதமர்
Embed widget