மேலும் அறிய
Advertisement
பீரோ உடைத்து 60 சவரன் நகைகள் திருட்டு
காஞ்சிபுரம் அருகே குடும்பத்தார் வீட்டில் இருந்த போதே பீரோவை உடைத்து 60 சவரன் நகை திருடு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சித்தேரி மேடு பஜனை கோயில் தெருவில் வசிப்பவர் துரையரசன்(38). ரயில்வே சிக்னல் டெக்னீசியனாக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு வீட்டில் குடும்பத்தாருடன் தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர்கள் வீட்டின் பின்புறத்தில் நுழைந்துள்ளனர். வீட்டினுள் சாவியை எடுத்து பீரோவை திறந்து, அதிலிருந்த 60 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றனர்.
காலை எழுந்து பார்த்தபோது பீரோ திறந்திருந்ததால் அதிர்ச்சியடைந்த துரையரசன், நகை திருடு போனதை அறிந்து பாலுசெட்டி சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கைரேகை உள்ளிட்ட தடயங்களை பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion