Crime: கொடூரத்தின் உச்சம்.! பிறப்புறுப்பில் களிமண் திணிக்கப்பட்ட அவலம்..! 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..!
பீகாரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பெண்களுக்கு எதிரான இழைக்கப்படும் குற்றங்களை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் தொடர்ந்து குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் எதிரான பாலியல் குற்றங்கள் கொடூரமான முறையில் பல்வேறு இடங்களில் நடைபெறுகின்றன. இந்த சூழலில், பீகாரில் ஒரு கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
10 வயது சிறுமி:
பீகார் மாநிலத்தில் அமைந்துள்ளது பூர்ணே மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ள தகரூவ காவல் நிலையத்திற்குடப்பட்ட பகுதியில் 10 வயது சிறுமி தன் வயதுடைய சிறுமியுடன் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியில் வசித்து வரும் 26 வயதான இளைஞரும் வந்துள்ளார். அவர் அந்த 10 வயது சிறுமியுடன் விளையாடிக்கொண்டிருந்த மற்ற சிறுமிகளை அவரவர் வீட்டிற்கு செல்லுமாறு மிரட்டி அனுப்பிவைத்துள்ளார்.
அந்த சிறுமிகளும் அவரவர் வீட்டிற்கு சென்ற பிறகு, இந்த 10 வயது சிறுமியை தனியாக ஆள் நடமாட்டமில்லாத பகுதிக்கு வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்றுள்ளார். அங்கு 10 வயது சிறுமி என்றும் பாராமல் அந்த சிறுமியை இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால், கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பிறப்பிறுப்பில் இருந்து கடுமையாக ரத்தம் வெளியேறியுள்ளது.
கொடூரத்தின் உச்சம்:
இதையடுத்து, அந்த இளைஞர் சிறுமியின் பிறப்பிறுப்பில் களிமண் மற்றும் மணலை நிரப்பியுள்ளார். அப்போது, வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை காணாத சிறுமியின் தாய் தனது மகளை தேடியுள்ளார். மேலும், மற்ற சிறுமிகளிடம் தனது மகள் எங்கே என்று கேட்டுள்ளார். அப்போது, அவர்கள் நடந்த விவரத்தை கூறியுள்ளனர். உடனடியாக, அந்த சிறுமியின் தாய் கிராமத்தினரை அழைத்துக் கொண்டு தனது மகளை தேடிச்சென்றபோது 10 வயது சிறுமியின் நிலையை கண்டு கதறி அழுதுள்ளார்.
அப்போது, கிராமத்தினர் கும்பலாக வருவதை கண்ட அந்த இளைஞர் தப்பி ஓட முயற்சித்துள்ளார். ஆனாலும், அந்த இளைஞரை விரட்டிப்பிடித்த கிராமத்தினர் சரமாரியாக அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த இளைஞர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட அந்த இளைஞர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: Crime : மாயமான ஏர்போர்ட் பணியாளர்.. துண்டு துண்டாக சூட்கேஸில் கொண்டுவரப்பட்ட உடல்.. மனைவியின் அதிர்ச்சி வாக்குமூலம்..
மேலும் படிக்க: Mayiladuthurai: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் இங்கு விற்பனைக்கு இல்லை.. போர்டு வைத்த வியாபாரியை பாராட்டிய ஆட்சியர்...!