மேலும் அறிய

Atrocities On Dalits: அடுத்த ஷாக்! பணத்தை கேட்ட பட்டியலினப் பெண்...நடுரோட்டில் அடித்த கொடூரம்...4 பேர் கொண்ட கும்பல் அட்டூழியம்!

மகாராஷ்ரா மாநிலத்தில் 4 பேர் கொண்ட கும்பல் இரக்கமில்லாமல் நடுரோட்டில் பட்டியலினப் பெண்ணை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Atrocities On Dalits: மகாராஷ்ரா மாநிலத்தில் 4 பேர் கொண்ட கும்பல் இரக்கமில்லாமல் நடுரோட்டில் பட்டியலினப் பெண்ணை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வைரலான வீடியோ:

மகாராஷ்டிரா மாநிலம்  சதாராவுக்கு அடுத்து உள்ள மான் எனும் ஒரு சிறிய கிராமத்தில் எடுக்கப்பட்டதாக, வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், நடுரோட்டில் படுத்துக் கொண்டிருந்த பெண்ணை நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று கையில் கட்டை போன்றவற்றை வைத்துக் கொண்டு கடுமையாக தாக்கியது. அங்கு 20க்கும் மேற்பட்டோர் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, 4 பேர் சேர்ந்து அந்த பெண்ணை காலால் எட்டி உதைத்து ஆபாச வார்த்தைகளால் பேசியது போன்று தெரிகிறது. அங்கு இருப்பவர்கள் சிலர் தடுத்து நிறுத்தியும் அந்த கும்பல் விடாமல் அடித்துக் கொண்டு இருந்தது போன்று வீடியோ வெளியானது. வீடியோவின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, காங்கிரஸ் மற்றும் தேசிய வாத காங்கிரஸ் கட்சியினர் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை பதிவு செய்தன. 

திடுக்கிடும் தகவல்:

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், "இந்த சம்பவம் ஆகஸ்ட் 26ஆம் தேதி நடந்தது. பாதிக்கப்பட்ட பெண் கடனாக  2 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். தன்னுடைய பணத்தை திருப்பி தருமாறு சம்மந்தப்பட்ட நபரிடம்  அந்த பெண் கேட்டிருக்கிறார். ஆனால், அவர்கள் தராமல் பல நாள் இழுத்தடித்துள்ளனர். ஒரு கட்டத்தில், பணத்தை திருப்பி கேட்டதற்கு அந்த பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளனர்” என்று தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேரை  போலீசார் கைது செய்தனர். அவர்கள் சந்தோஷ் ஷிண்டே, ஜனப்பா ஷிண்டே, சாந்தாராம் நரலே, நரலே என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.  பாதிக்கப்பட்ட பெண்ணின் மகன் கெடுத்த புகாரின் அடிப்படையில் தலித் பெண்ணை இரக்கமின்றி தாக்கியவர்கள் மீது எஸ்.சி.எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.  

தொடரும் கொடூரங்கள்:

சமூகம் முன்னேற்றம் அடைந்ததாக சொல்லி கொண்டாலும், தொழில்நுட்ப ரீதியாக எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும், சாதிய கொடூரங்கள் இன்றளவும் தொடர்கிறது. குறிப்பாக, தலித் பெண்கள், சிறுமிகளுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.  இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர் கோரிக்கை எழுந்து வருகிறது. சமீபத்தில் கூட, மத்திய பிரதேசத்தில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த ஒருவர் மீது, பாஜக நிர்வாகி சிறுநீர் கழித்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருந்தது. 

 

தலைப்பு செய்திகள்

45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
"ஏ...தள்ளு தள்ளு தள்ளு.." ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறாது - பொதுமக்கள் வேதனை..!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
Embed widget