Crime: ”என்ன மன்னிச்சிடுங்க அம்மா, அப்பா..” காதலிப்பதாக கூறி அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட இளைஞன்.. இளம்பெண் தற்கொலை..
அந்தரங்க புகைப்படங்களை இளைஞர் சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தின் தலைநகர் கவுகாத்தி. கவுகாத்தி அருகே அமைந்துள்ளது காந்தி மண்டப். இந்த பகுதியில் பதின்ம வயது பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்த நிலையில், அந்த பெண் திடீரென நேற்று தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினருக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில் உயிரிழந்த இளம்பெண் தற்கொலை செய்வதற்கு முன்பு கடிதம் ஒன்று எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், ”மன்னிச்சுடுங்க அம்மா, மன்னிச்சுடுங்க அப்பா, மன்னிச்சுடுங்க அக்கா என்று ஆங்கிலத்திலும், மற்ற சில விஷயங்களையும்” எழுதியிருந்தார்.
அவர் எழுதிய கடிதத்தை வைத்தும், அவரது அறையில் கண்டெடுக்கப்பட்ட அவரது செல்போனை வைத்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில், இளம்பெண் அமித்மேதி என்பவருடன் பழகி வந்தது தெரிய வந்துள்ளது. அமித் அந்த இளம்பெண்ணை காதலிப்பதாக கூறி நெருக்கமாக இருந்துள்ளார். மேலும், இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருந்தபோது தனது செல்போனில் புகைப்படங்களையும், வீடியோக்களையும் எடுத்துள்ளார்.
இந்த நிலையில், சமூக வலைதளங்களில் அந்த இளம்பெண்ணுடன் தனிமையில் இருந்தபோது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதைக்கண்ட அந்த இளம்பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும், இதனால் கடுமையாக மன உளைச்சலுக்கு ஆளான அந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
போலீஸ் விசாரணையில் இந்த அதிர்ச்சி தகவல் தெரிய வரவும், இளம்பெண்ணின் தற்கொலைக்கு காரணமாக இருந்த அமித்மேதியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து போலீசார் செல்போனை கைப்பற்றினர். அதில், அவர் இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இருந்துள்ளது. போலீசார் அவரை கைது செய்ததுடன் அவரது செல்போனையும் பறிமுதல் செய்து விசாரணையை துரிதப்படுத்தி வருகின்றனர்.
காதலிப்பதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றி அவருடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)உங்கள் பகுதியில் உள்ள குறைகள் பற்றி நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.
மேலும் படிக்க: Crime: பெரியகுளம் அருகே போலீசாரை வெட்ட முயற்சித்த சம்பவம் - ஒருவர் கைது, மற்றொருவர் தப்பியோட்டம்
மேலும் படிக்க: கொத்து கொத்தாய் மனித எலும்பு கூடுகள் - கண்டறியப்பட்ட விடுதலை புலிகளின் ஆடைகள்: முல்லைத்தீவு அருகே அதிர்ச்சி