மேலும் அறிய

Crime: ஜாமீனில் வந்து மனைவியை கொன்று புதைத்த ரவுடி - புதுவையில் பரபரப்பு

புதுச்சேரியில் ஜாமீனில் வந்து மனைவியை கொன்று புதைத்த ரவுடி கூட்டாளிகளுடன் கைது

புதுச்சேரியில் ஜாமீனில் வந்து மனைவியை கொன்று புதைத்த ரவுடி கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டார். 9 ஆண்டுகளுக்கு முன் பெண் மாயமானதாக கருதப்பட்ட வழக்கில் துப்பு துலங்கிய பயங்கர சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி முதலியார்பேட்டையை சேர்ந்தவர் பிரபல ரவுடி பாஸ்கர் (வயது45). இவரது மனைவி எழிலரசி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் கடந்த 2009-ம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் பாஸ்கர் கைதானார். அதன்பின் அவர் கடந்த 2016-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். இதற்கிடையே கடந்த 2013ம் ஆண்டில் இருந்து பாஸ்கரின் மனைவி எழிலரசி திடீரென்று மாயமானார். இதுகுறித்து அவரின் உறவினர்கள் அளித்த புகாரின்பேரில் முதலியார்பேட்டை போலீசார் மாயமான எழிலரசியை தேடினார்கள். ஆனால் அவரை பற்றி எந்த துப்பும் கிடைக்கவில்லை.

இதனால் இந்த வழக்கை போலீசார் மூடி வைத்தனர். இந்தநிலையில் சமீபத்தில் உழந்தை ஏரிக்கரையை பலப்படுத்துவதற்கான பணிகள் தொடங்கின. இதற்காக அங்கு குழிதோண்டும் பணி நடந்தது. இதை அறிந்த பாஸ்கர் பதறிப்போனார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அந்த இடத்தை தோண்டி அதில் இருந்த எலும்பு கூடுகளை எடுத்து அருகில் இருந்த உழந்தை ஏரியில் வீசி விட்டு எதுவும் தெரியாதது போல் பாஸ்கர் இருந்து வந்தார். இதற்கிடையே முதலியார்பேட்டை போலீசுக்கு பாஸ்கர் உழந்தை ஏரி பகுதியில் இருந்து அவசர அவசரமாக குழிதோண்டி எலும்புக்கூடுகளை எடுத்து வீசியது பற்றி தெரியவந்தது. அப்போது தான் காணாமல் போன எழிலரசியை தான் பாஸ்கர் கொலை செய்து விட்டு ஏரி பகுதியில் உடலை புதைத்த அதிர்ச்சி தகவல் கிடைத்தது. இதையடுத்து எழிலரசி மாயமான வழக்கில் 9 ஆண்டுகளுக்கு பிறகு போலீசுக்கு துப்பு துலங்கியது. மனைவியை பாஸ்கர் கொலை செய்தது ஏன்? என்பது குறித்து விசாரித்ததில் கிடைத்த தகவல் குறித்த போலீசார் தரப்பில்  கூறியதாவது :-

ஏற்கனவே கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த பாஸ்கர் கடந்த 2013-ம் ஆண்டில் ஜாமீனில் வந்துள்ளார். அப்போது அவருக்கு தனது மனைவி மீது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினார். அதன்படி நைசாக பேசி எழிலரசியை ஒரு காரில் ஏற்றிக்கொண்டு உழந்தை ஏரிக்கு அழைத்து வந்தார். அங்கு வந்தவுடன் காருக்குள்ளேயே எழிலரசியின் கழுத்தை நெரித்து பாஸ்கர் கொலை செய்து அந்த இடத்திலேயே குழிதோண்டி உடலை புதைத்தார். அப்போது பாஸ்கருக்கு அவரது கூட்டாளிகளான ரவுடிகள் வேல்முருகன் (36), சரவணன் (34), மனோகர் (32) ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். அதன்பிறகு மீண்டும் சிறைக்கு சென்று பழைய கொலைக்கான தண்டனை முடிந்து 2016-ம் ஆண்டு பாஸ்கர் வெளியேவந்தார். அப்போது முதல் தினமும் இரவில் தனது கூட்டாளிகளான வேல்முருகன், சரவணன், மனோகர் ஆகியோருடன் சேர்ந்து அந்த பகுதியில் மது குடிப்பதை பாஸ்கர் வாடிக்கையாக வைத்து இருந்தார்.

இந்தநிலையில் தான் உழந்தை ஏரி பலப்படுத்துவது தொடர்பான தகவல் அறிந்து போலீசில் சிக்கிக்கொள்வோம் என பயந்து அவசர அவசரமாக அங்கு குழி தோண்டி எழிலரசியின் எலும்புக்கூடுகளை எடுத்து அப்புறப்படுத்திய போது போலீஸ் பிடியில் பாஸ்கர் கூட்டாளிகளுடன் வசமாக சிக்கினார் என தெரிவித்தனர். இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக ரவுடிகளான பாஸ்கர் அவரது கூட்டாளிகள் வேல்முருகன், சரவணன், மனோகர் ஆகியோரை முதலியார்பேட்டை போலீசார் கைது செய்தனர். அடுத்த கட்டமாக எழிலரசியின் எலும்புக் கூடுகள் எங்கே வீசப்பட்டது அவர் புதைக்கப்பட்ட இடத்தை மீண்டும் தோண்டி வேறு எதுவும் தடயம் சிக்குமா என்பது குறித்து முதலியார்பேட்டை போலீசார் திட்டமிட்டு வருகின்றனர். 9 ஆண்டுகளுக்கு முன் மாயமானதாக கருதப்பட்ட பெண் ரவுடியான அவரது கணவராலேயே கொலை செய்யப்பட்டது அம்பலமானது புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
Red Alert:  இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Red Alert: இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
"ஒரு காலத்தில் AIDSக்கு மருந்தே இல்ல" சொல்கிறார் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா!
"BEEF-க்கு தடையா.. காங்கிரஸ் கேட்டா பண்றேன்" பற்ற வைத்த ஹிமந்த பிஸ்வா சர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin : ’’தூங்கி வழிந்த அதிமுக அரசு தூக்கம் தொலைத்த சென்னை’’விளாசும் ஸ்டாலின்Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
Red Alert:  இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Red Alert: இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
"ஒரு காலத்தில் AIDSக்கு மருந்தே இல்ல" சொல்கிறார் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா!
"BEEF-க்கு தடையா.. காங்கிரஸ் கேட்டா பண்றேன்" பற்ற வைத்த ஹிமந்த பிஸ்வா சர்மா!
கோடிக்கணக்கில் விற்பனை.. சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஏழை கைவினை கலைஞர்கள் அசத்தல்!
கோடிக்கணக்கில் விற்பனை.. சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஏழை கைவினை கலைஞர்கள் அசத்தல்!
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
WhatsApp:சாட் கஸ்டம் லிஸ்டில் புதிய ஃபில்டர் வசதியை அறிமுகம் செய்யும் வாட்ஸ் அப்!அப்டேட் விவரம்!
WhatsApp:சாட் கஸ்டம் லிஸ்டில் புதிய ஃபில்டர் வசதியை அறிமுகம் செய்யும் வாட்ஸ் அப்!அப்டேட் விவரம்!
Annamalai:
"பாஜகவுக்கு பயமில்ல.. திராவிட சித்தாந்தத்தையே பேசும் விஜய்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Embed widget