மேலும் அறிய

Crime: பணி நியமன ஆணை.. அடையாள அட்டை.. ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக ரூபாய் 24 லட்சம் மோசடி..!

Crime: இரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி ரூ.24 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி ரூ.24 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரயில்வேயில் வேலை:

சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் தாலுகாவைச் சேர்ந்தவர் டேனியல் மனோஜ் பிரிட்டோ. இவர், சில நாட்களுக்கு முன், தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தின் மத்திய குற்றப்பிரிவு வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவில் புகார் அளித்திருந்தார். 

அவர் அளித்த புகார் விவரம்: பாலவாக்கம், முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவர், ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக சொல்லியிருக்கிறார். இதை நம்பிய மனோஜ் பிரிட்டோ வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்திருக்கிறார். போலியாக நேர்காணலுக்கு டெல்லிக்கு அழைத்து சென்றார். தொடர்ந்து, ரயில்வே மருத்துவமனையில் பரிசோதனை செய்து, டெல்லி மற்றும் வாரணாசி ஆகிய இடங்களுக்கு அழைத்து சென்று, போலியான பணி ஆணை மற்றும் அடையாள அட்டை வழங்கியிருக்கிறார். 

24 லட்சம் அபேஸ்:

இதற்காக 24 லட்சம் ரூபாயையும் அவரிடமிருந்து வாங்கியிருக்கிறார்.ஆனால், அவர் அளித்த போலியானது என்றும் வேலை வாங்கி தராமல் மோசடி செய்ததாக குறிப்பிட்டிருந்தார். 

இது தொடர்பாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அதில், சாகுல் ஹமீது மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து, இரண்டு மொபைல் போன், போலி பணி ஆணை, போலி அடையாள அட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.  மேலும், சாகுல் ஹமீதின் மொபைல் போன் எண்களை வைத்து, அவரிடம் இதுபோல் ஏமாந்த நபர்களின் பட்டியலையல் பற்றி தகவல் சேகரித்துள்ளனர்.  இந்த வழக்கில் சாகுல் ஹமீதுவிற்கு உதவி செய்வதவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இணைய வழி மோசடிக்காரர்களிடம் சிக்கிய புதுச்சேரியை சேர்ந்த 19 நபர்கள் 29,96,011 ரூபாய் பணத்தை இழந்தனர்.

இணைய வழி மோசடி:

புதுச்சேரி அருகே உள்ள மூலகுலத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்ற நபர் இணையவழியில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருகிறோம் என்று சொன்னதை நம்பி 9 லட்சத்து 13 ஆயிரத்து 274 ரூபாய் அவர்கள் கூறிய பல்வேறு வங்கிக் கணக்கில் செலுத்திய பிறகு அவர்களை தொடர்பு கொள்ள முடியாததால் அது சம்பந்தமாக புகார் கொடுத்துள்ளார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏமாந்த மக்கள்:

ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த அனிதா என்பவர் டோல் DOLE என்ற MLM நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஒரே நாளிலேயே பணம் இரட்டிப்பாக கொடுக்கிறார்கள் என்று 5,72,26 ரூபாயை முதலீடு செய்து பிறகு அவர்களிடம் இருந்து எந்த பணமும் வராததால் ஏமாற்றத்தை கண்டு இணை வழி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகார் தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது.

இதே டோல் என்ற நிறுவனத்தின் பெயரை வைத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு 40க்கும் மேற்பட்டோர் இரண்டு கோடி ரூபாய் அளவிற்கு ஏமாந்ததாக புகார் இருக்கின்றது அது சம்பந்தமாக அனைத்து பத்திரிக்கை மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக எச்சரிக்கை செய்யப்பட்டும் இதுபோன்று பணத்தை பொதுமக்கள் இழக்கின்றனர்.

டாஸ்கை முடித்தால் இரட்டிப்பாக பணம் 

புதுச்சேரி சேர்ந்த லோகநாதன் என்பவர் நாங்கள் கொடுக்கின்ற டாஸ்கை நீங்கள் செய்து முடித்தால் உங்களுக்கு பணம் இரட்டிப்பாக கொடுக்கிறோம் என்று இணைய வழி மோசடிக்காரர்கள் சொன்னதை நம்பி 4,64,000 பணத்தை அனுப்பி அந்த பணம் அவருக்கு திரும்ப வரவில்லை என்ற பிறகு அது சமமாக புகார் கொடுத்துள்ளார்.

வாண்ட்ரப்பேட்  பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் இணைய வழியில் சம்பாதிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்று வாட்ஸ் அப்பில் வந்த தகவலை எடுத்து இரண்டு லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்த பிறகு பணத்தை எடுக்க முடியாததால் கொடுத்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பான் கார்டு அப்டேட் மோசடி:

முத்தியால்பேட்டை பிரபாகரன் என்பவர் உங்களுடைய பான் கார்டு அப்டேட் செய்கிறோம் என்று கூறிய நபரிடம் அவருடைய விவரங்கள் அனைத்தையும் சொன்ன பிறகு அவர் வங்கி கணக்கில் இருந்த 24 ஆயிரத்து 986 ரூபாய் எடுத்து விட்டனர் என்பது சம்பந்தமாக புகார் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இது பற்றி இணைய வழி காவல் கண்காணிப்பாளர் திரு பாஸ்கரன் மற்றும் இணைய வழி ஆய்வாளர்கள் கார்த்திகேயன் மற்றும் கீர்த்தி ஆகியோர் பொது மக்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் இணைய வழியில் வருகின்ற எந்த தகவலையும் நம்பி பணத்தை செலுத்த வேண்டாம் சராசரியாக நாள் ஒன்றுக்கு 15க்கும் மேற்பட்ட நபர்கள் இணைய வழி மோசடிக்காரர்களிடம் சிக்கி பணத்தை இழக்கின்றனர் என்று பல்வேறு தளங்கள் மூலமாக குறிப்பாக பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகள் மூலமாக மேலும் பல்வேறு கல்லூரிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்தும் இது சம்பந்தமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

காவல்துறை எச்சரிக்கை:

ஆகவே பொதுமக்கள் இணைய வழியில் வருகின்ற எந்த வேலை வாய்ப்பு, முதலீடு, பணம் இரட்டிப்பாக தருகிறோம், குறைந்த விலையில் பொருட்களை தருகிறோம், பழைய பொருட்கள் மிக குறைந்த விலையில் தருகிறோம், போன்ற எந்த ஒரு இணைய வழி அழைப்பையும் நம்பி பணத்தை செலுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget