பட்டா மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம்: கையும், களவுமாக சிக்கிய சார் ஆய்வாளர்
விழுப்புரம்: செஞ்சியில் பட்டா மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவை சார் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்: செஞ்சியில் பட்டா மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவை சார் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சக்கராபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் ஜோசப்(40). இவர் கவரை கிராமத்தில் உள்ள தனது வீட்டுமனையை அளந்து பட்டா மாற்றம் செய்ய முடிவு செய்தார். இதற்காக அவர், செஞ்சி தாலுகா அலுவலகத்தில் உள்ள நில அளவையர் பிரிவில் வட்ட நில அளவை சார் ஆய்வாளராக பணியாற்றி வரும் அன்புமணி(35) என்பவரை அணுகினார்.
Karur Mayor Kavitha Inspection | ”இது மார்க்கெட்டா? பஸ் ஸ்டாண்டா?” அதிகாரிகளை வெளுத்து வாங்கிய மேயர்
அப்போது பட்டா மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று ஜோசப்பிடம், நில அளவை சார் ஆய்வாளர் அன்புமணி கூறியதாக தெரிகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜோசப், இதுகுறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் கொடுத்தார். பின்னர் போலீசார் கூறிய அறிவுரைப்படி, ரசாயன பொடி தடவிய பணத்தை நேற்று ஜோசப் செஞ்சி- விழுப்புரம் சாலையில் உள்ள ஒரு கடையின் அருகே அன்புமணியிடம் கொடுத்தார். அந்த பணத்தை நில அளவை சார் ஆய்வாளர் அன்புமணி வாங்கிய போது,
Ponmudi Speech : ”இந்தி படிச்சா.. கோயம்பத்தூரில் பானி பூரி தான் விற்கலாம்” அமைச்சர் பொன்முடி!
அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன், இன்ஸ்பெக்டர்கள் அருண்ராஜா, அன்பழகன், ஏட்டுகள் விஜயதாஸ், பாலமுருகன் ஆகியோர் கையும், களவுமாக பிடித்து தாலுகா அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர். பட்டா மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக நில அளவை சார் ஆய்வாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பட்ட மாற்றம் செய்யா லஞ்சம் வாங்குவது வாடிக்கையாகிவிட்டது, இதனால் பொதுமக்கள் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளனர்.
மேலும் படிக்க : Watch Video : பார்வை கற்பூர தீபமா..! நாதஸ்வரத்திலே வாசித்து அசத்திய கிராமிய கலைஞர்..!
மேலும் படிக்க : ”அரசியலுக்கு போனா பொய் சொல்லணும்” என்ற சிவகார்த்திகேயன்! - அதிர்ச்சியடைந்த உதயநிதி !
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்