மேலும் அறிய
Advertisement
இலங்கை வழியாக இங்கிலாந்து கடத்த முயன்ற அம்பர் கிரீஸ் ; 6 பேர் கைது
அம்பர்கிரீஸை இலங்கை கடத்தி சென்று அங்கிருந்து இந்தோனேசியா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட இருந்தது தெரியவந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.2 கோடி ஆகும்.
திமிங்கலம் வாயிலிருந்து உமிழக்கூடிய 2 கிலோ எடையுள்ள அம்பர்கிரீஸ் என்ற மெழுகு பொருளை போலீசார் கைபற்றினர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.2 கோடி. தஞ்சாவூலிருந்து காரில் கொண்டு வந்து திருச்செந்தூர் பகுதியில் விற்க முயன்ற போது சிக்கியது. இது தொடர்பாக 6 பேரை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைந்தனர், காரும் பறிமுதல்.
திருச்செந்தூர் பகுதியில் ஒருவித விலையுர்ந்த பொருளை கடத்தி கொண்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தாலுகா இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மேற்பார்வையில் தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் சுந்தரம் தலைமையிலான தனிப்படை போலீசார் தாலுகா ஆபீஸ் ரோட்டில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான ஒரு காரை போலீசார் பிடித்து சோதனையிட்டனர். அப்போது அதில் மெழுகு போன்ற பொருளை பையில் மறைந்து வைத்திருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து ஏ.எஸ்.பி. ஹர்ஷ்சிங் உத்தரவில் அதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்தது. இது திமிங்கலம் வாயிலிருந்து உமிழக்கூடிய அம்பர்கிரீஸ் என்பது தெரியவந்தது. இது வாசனை திரவியம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் ஒருவகை பொருளாகும். இது இந்தோனோசியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் கோடி கணக்கில் மதிப்புடையது என்பது தெரியவந்தது. இது தொடர்பாக காரில் வந்த 6 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் தஞ்சாவூர் மாவட்டம் பாளையம்பட்டியை சேர்ந்த இளங்கோவன், அருப்புகோட்டையை சேர்ந்த ராம்குமார், நாகப்பட்டிணத்தை சேர்ந்த முஹம்மது அஸ்லம், திருச்சி அரியமங்கலம் ராஜா முஹம்மது, தஞ்சாவூரை சேர்ந்த வெங்கடேஷ், ஜான்பிரிட்டோ என்பது தெரியவந்தது. இவர்கள் அம்பர்கிரீஸ் என சொல்ல கூடிய விலையுர்ந்த பொருளை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தது. விலையுர்ந்த அம்பர்கிரீஸ் மெழுகு போன்ற பொருளை இங்கிருந்து இலங்கை கடத்தி சென்று அங்கிருந்து இந்தோனேசியா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட இருந்தது தெரியவந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.2 கோடி ஆகும்.
பிடிப்பட்ட 2 கிலோ எடையுள்ள ஆம்பர்கிரீஸ் மற்றும் 6 பேர், அவர்கள் வந்த காரையும் திருச்செந்தூர் போலீசார் திருச்செந்தூர் வனச்சரக அலுவலர் ரவீந்திரன் குழுவினரிடம் ஒப்படைந்தனர். தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் செண்பகபிரியா உத்தரவின் பேரில் 6 பேரையும் வனத்துறையினர் கைது செய்து திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தினர். அவர்கள் வந்த காரையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வனசரக அலுவலர் ரவீந்திரன் கூறுகையில், பிடிப்பட்டது திமிங்கலம் வாயிலிருந்து உமிழக்கூடிய அம்பர்கிரீஸ் என்பது தெரியவந்தது. இது 1972 வனஉயிரின பாதுகாப்பு சட்டம் அட்டவணை 2ன் கீழ் வகைப்படுத்தப்பட்டது. இது தடை செய்யப்பட்டது. இந்த அம்பர் கிரீஸ் வாசனை திரவியம் தயாரிக்க பயன்படும் ஒருவகையான பொருளாகும். பிடிப்பட்ட அம்பர்ஸ்கிரீஸ் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். பிடிப்பட்ட அம்பர் கீரிசை ஐதராபாத்தில் உளள இன்ஸ்டியூட்டிற்கு பரிசோதனைக்கு அனுப்படும் என்றார்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
சென்னை
தேர்தல் 2024
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion