மேலும் அறிய

கூத்து பார்க்க சென்ற கடலூர் அதிமுக பிரமுகர்... புதுச்சேரியில் வெட்டி படுகொலை

கடலூரைச் சேர்ந்த அதிமுக பிரமுகரை காரில் வந்த மர்ம நபர்கள் புதுச்சேரியில் கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றனர்

புதுச்சேரி: கடலூரைச் சேர்ந்த அதிமுக பிரமுகரை காரில் வந்த மர்ம நபர்கள் புதுச்சேரியில் கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றனர். பழிக்கு பழியாக கொலை செய்யப்பட்டாரா என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலுார் திருப்பாதிரிப்புலியார் நவநீதம் நகரை சேர்ந்தவர் பத்மநாபன். நேற்று இரவு பாகூர் அருகே உள்ள திருப்பனாம்பாக்கம் கிராமத்தில் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடந்த கூத்து மற்றும் கரகாட்ட நிகழ்ச்சியை பார்ப்பதற்கு சென்றுள்ளார். பின்னர், இன்று தனது நண்பரான கூத்து கலைஞர் ரங்கா என்பவருடன் பைக்கில் கடலுார் நோக்கி சென்று கொண்டிருந்தார். பாகூர் அருகே உள்ள இருளஞ்சந்தை வாட்டர் டேங்க் அருகே சென்ற போது, பின்னால் காரில் வந்த கும்பல், பைக்கின் மீது வேகமாக மோதி கிழே தள்ளியது. உடனே, காரில் இருந்து இறங்கிய மர்ம கும்பல், பத்மநாபனை வெட்டி விட்டு தப்பிச் சென்றது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த புதுச்சேரி தெற்கு பகுதி எஸ்.பி., பக்தவச்சலம், பாகூர் காவல் ஆய்வாளர் சஜித், உதவி ஆய்வாளர்  நந்தக்குமார் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேரிக்கப்பட்டன. மேலும், தடயவியல் நிபுணர்கள் குழுவினர், சம்பம் நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டு தடயங்களை சேகரித்தனர். இது குறித்து பாகூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல் துறை தரப்பில் தெரிவிக்கையில், கடந்த ஆண்டு கடலுாரில் மஞ்சள் நீர் விழாவில், நடனம் ஆடியது தொடர்பாக, அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவரை, பத்மநாபன் தரப்பினர் கண்டித்துள்ளனர். இதனால், அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் படுகாயமடைந்த பாஸ்கர் உயிரிழந்தார். திருப்பாபுலியூர் போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து, பத்மநாபன் உள்ளிட்டோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் சிறையில் இருந்து பத்மநாபன் ஜாமினில் வெளியே வந்துள்ளார். இவர் கவுன்சிலர் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட சீட்டு கேட்டுள்ளார். தற்போது மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டு இருப்பதன் மூலம் ஏற்கெனவே நடந்த கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் பத்மநாபன் வெட்டி கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget