மேலும் அறிய

Crime: அ.தி.மு.க. பிரமுகர் நாட்டு வெடிகுண்டு வீசி நடுரோட்டில் வெட்டிப் படுகொலை - சென்னையில் பயங்கரம்!

Chengalpattu : சென்னை அடுத்த வண்டலூர் பகுதியில் அ.தி.மு.க. பிரமுகர் நாட்டு வெடிகுண்டு வீசி ஓட, ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த வேங்கடமங்கலம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் வெற்றி கொலை 
 
பல்வேறு குற்ற சம்பவங்கள் 
 
செங்கல்பட்டு  ( Chengalpattu News ) : சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதேபோன்று சென்னை புறநகர் பகுதிகளில் பெரிய ரவுடிகள் மற்றும் குட்டி குட்டி ரவுடிகளின்  அதிகரித்து வருகிறது. காவல்துறையினரும் ரவுடிசத்திற்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
 
அவ்பொழுது காவல்துறையினர் மற்றும் ரவுடிகளுக்கிடையே நடைபெறும் மோதலின் பொழுது என்கவுண்டரில் பல ரவுடிகள் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். இருந்தும் போதை உள்ளிட்ட பழக்கங்களுக்கு அடிமையாகும் குட்டி ரவுடிகள் தொடர்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் பிரமுகர்கள் மற்றும் வியாபாரிகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிப்பது இந்த ரவுடிகளின் வழக்கமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக ரவுடிகளுக்கிடையே சில சமயங்களில் மோதல் ஏற்படுவதும் , இதனால் பல இடங்களில் கொடூர கொலைகள் நடைபெறுவது அதிகரித்து வருகிறது.
 
ஊராட்சி மன்ற தலைவரின் மகன்
 
சென்னையின் புறநகர் மாவட்டமாக இருக்கக்கூடிய செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அடுத்த  வேங்கடமங்கலம் ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் அதிமுக பிரமுகராக உள்ளார். இவர் வேங்கடமங்கலம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவராக இருந்துள்ளார். இவரது மனைவி கல்யாணி தற்பொழுது ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார்.
 
இதேபோன்று அவரது மகன் அன்பரசு (34) ஒன்பதாவது வார்டு உறுப்பினராகவும் உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு நண்பர்களோடு கீழ்ப்பாக்கம் அருகே உள்ள சுடுகாடு பகுதியில் தனது நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது, அடையாளம் தெரியாத 4 பேர் கொண்ட கும்பல் அன்பரசு சென்ற காரை வழிமறித்து இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் வீசி உள்ளனர்.
 
ஓட ஓட விரட்டி கொலை 
 
அப்போது காரில் இருந்த அன்பரசு மற்றும் அவரது நண்பர்கள் காரிலிருந்து இறங்கி தப்பி ஓட முயன்ற போது ,மர்ம நபர்கள் அன்பரசை விரட்டி துரத்திச் சென்று அரிவாளால் கை, கால், தலை என பல்வேறு இடங்களில் சரமாரியாக  பெட்டி விட்டு தப்பி ஓடி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அன்பரசு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த காயார் போலீசார் அன்பரசு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தப்பியோடிய மர்ம கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
தொடர் கண்காணிப்பில் காவல்துறை
 
இதுபோன்று சம்பவங்களில் ஈடுபடும் ரவுடிகளின் பட்டியல்கள் அவர்களின் குற்றச்சம்பவங்களை அடிப்படையில் வகை பிரிக்கப்பட்டு, ரவுடிகளின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் நண்பர்கள் உறவினர்கள் ஆகியவர்களின் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். குற்றச் செயலில் ஈடுபடுவதற்கு முன்பே பல ரவுடிகளை போலீசார் தடுத்து, கைது செய்யப்பட்டு குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்து நிறுத்தியதாகவும் ,காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இருந்தும் சில சமயங்களில் முன் பகை உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
ஐயப்ப பக்தர்களே... சபரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
ஐயப்ப பக்தர்களேச.. பரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
TVK Invited by Governor: ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”பாஜகவோட கூட்டணி இல்ல” நிதிஷ் கொடுத்த வார்னிங்! குழப்பத்தில் பாஜககாதல் திருமணம் செய்த பெண்! கத்தியுடன் வந்த குடும்பம்! காரில் கடத்திய பகீர் காட்சிLorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | Madurai

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
ஐயப்ப பக்தர்களே... சபரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
ஐயப்ப பக்தர்களேச.. பரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
TVK Invited by Governor: ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
இன்ஸ்டா பழக்கத்தால் ஏமாந்த சென்னை பெண் -  திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் புகார்
இன்ஸ்டா பழக்கத்தால் ஏமாந்த சென்னை பெண் - திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் புகார்
ரவுடிகளுக்கு எதுக்கு இந்த பெயர்? – போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்
ரவுடிகளுக்கு எதுக்கு இந்த பெயர்? – போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்
சீமானிடம் போட்டோ கொடுத்ததே நான்தான் - ராஜீவ்காந்தி
சீமானிடம் போட்டோ கொடுத்ததே நான்தான் - ராஜீவ்காந்தி
Embed widget