உடலுறவுக்கு வற்புறுத்தும் மாமனார்.. சொரியாசிஸை மறைத்த கணவர்.. இளம்பெண்ணின் பகீர் புகார்
அகமதாபாத்தைச் சேர்ந்த 31 வயதான பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
சொரியாசிஸ் இருப்பதை மறைத்து திருமணம் செய்துவிட்டதாக இளம்பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் தன்னிடம் உடலுறவு கொள்ள மாமனார் வற்புறுத்துவதாகவும் அவர் தன்னுடைய புகாரில் குறிப்பிட்டுள்ளார்
அகமதாபாத்தைச் சேர்ந்த 31 வயதான பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனக்கும் தன் கணவருக்கும் டிசம்பர் 7, 2020ம் ஆண்டு திருமணம் முடிந்தது. காந்திநகரைச் சேர்ந்த அவர் ஆட்டோமொபைல் ஷோரூம் ஒன்றை நடத்தி வருகிறார். திருமணம் முடிந்த சில நாட்களில் அவர் உடலில் சில தோல் நோய்கள் இருப்பதை பார்த்தேன். அவருக்கு சொரியாசிஸ் பாதிப்பு இருந்தது. திருமணத்தின்போது இது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. உண்மையை மறைத்து திருமணத்தை முடித்துள்ளனர். இது குறித்து தற்போது கேட்டால் கணவர் குடும்பத்தினர் மிரட்டுகின்றனர்.
அதுமட்டுமின்றி மெடிக்கல் ஸ்டோர் வைக்க வேண்டுமென்று ரூ.5 லட்சம் வரதட்சணை வேண்டுமென அவர்கள் தொல்லை கொடுப்பதாகவும் அப்பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமின்றி பாலியல் ரீதியாகவும் கணவர் குடும்பத்தினர் தன்னை துன்புறுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஒருமுறை தன்னுடைய அறைக்கு வந்த மாமனார், பாலியல் ரீதியாக துன்புறுத்தி உடலுறவுக்கு வற்புறுத்தினார். மறுத்த தன்னை அவர் தாக்கினார். அதனால் நான் அலறினேன். சத்தம் கேட்டு அறைக்குள் வந்த கணவரின் சகோதரியும் என்னை தாக்கினார் என்றார்.
தன் தந்தையுடன் உடலுறவு வைக்கவில்லை என தன் கணவரே தன்னை தாக்கியதாக புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார். அப்பெண்ணின் புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் பாலியல் தொல்லை, குடும்ப வன்முறை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
இன்ஸ்டாவில் மெசேஜ் அனுப்பிய கடத்தப்பட்ட சிறுமி: ஸ்நாப்சாட் உதவியுடன் மீட்ட பிரெஞ்சு போலீஸ்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்