மேலும் அறிய

Actress Gautami: நடிகை கௌதமியை ஏமாற்றிய அழகப்பன்? 6 முறை சம்மன்”: மூன்று தனிப்படைகள் அமைத்த போலீஸ்

நடிகையும் பாஜகவில் இணைந்து பணியாற்றி வந்தவருமான நடிகை கௌதமி, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் இது தொடர்பாக முன்னதாக புகார் அளித்திருந்தார்.

பிரபல நடிகை கௌதமி அளித்த  நில மோசடி புகாரில்  தலைமுறைவாக உள்ள அழகப்பனை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 

பிரபல நடிகையும் பாஜகவில் இணைந்து பணியாற்றி வந்தவருமான நடிகை கௌதமி, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் இது தொடர்பாக புகார் அளித்திருந்தார்.

கோட்டையூரில் உள்ள தனக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்புள்ள சொத்துகளை பாஜகவைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் நடத்தி வருபவரான அழகப்பன் என்பவர் மோசடி செய்துவிட்டதாகவும், 2004 ஆம் ஆண்டு தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது தனக்கு சொந்தமான நிலத்தை விற்க முடிவெடுத்து அழகப்பன் உதவியை நாடியதாகவும், ஆனால் தன்னிடம் பல்வேறு பத்திரங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டு அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். 

தொடர்ந்து கடந்த அக்.23ஆம் தேதி பாஜகவில் இருந்து தான் விலகுவதாக அறிவித்த கௌதமி, தான் 25 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்தும் தேர்தல் நேரத்தில் கட்சியால் கைவிடப்பட்டதாகவும், பாஜகவின் மூத்த நிர்வாகிகள் அழகப்பனுக்கு துணையாக இருப்பதாகவும், கட்சியில் இருந்து எந்த ஆதரவும் தனக்கு கிடைக்காததாகவும் வேதனையுடன் பகிர்ந்திருந்தார்.

கௌதமியின் இந்த முடிவு சினிமா, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், கௌதமி புகார் அளித்த அழகப்பன் பாஜகவில் இல்லை என்றும்,  தான் கௌதமி பக்கம் ஆதரவாக இருப்பதாகவும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கௌதமியின் புகாரின்பேரில், அழகப்பன் உள்பட 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், 6 முறை சம்மன் அளித்தும் அழகப்பன் உட்பட குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் எவரும் ஆஜராகவில்லை என மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தகவல் அளித்துள்ளது.

மேலும், தலைமறைவாக உள்ள அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 6 நபர்களைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Holiday Special Bus : 2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
Embed widget