என் மகளை மீட்டுத்தாங்க.. குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் தாடி பாலாஜி புகார்..
தனது மகளை தன் மனைவியிடம் இருந்து மீட்டுத் தாருங்கள் என குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி புகார் அளித்துள்ளார்.
பல்வேறு தமிழ் சினிமாவில் நடித்துள்ள நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி என்ற பாலாஜி தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலும் அதிகளவு பங்கேற்று வருகிறார். இவருக்கு நித்யா என்ற மனைவியும் போர்ஷிகா என்ற மகளும் உள்ளனர். பாலாஜி - நித்யா தம்பதிக்கு இடையே பல வருடங்களாக கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.
#Abpnadu | சின்னத்திரை நடிகர் பாலாஜி தன் மனைவியிடம் இருந்து மகளை மீட்டுத் தரக் கோரி மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு இருந்து சூழலில் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். @PMarisamy1 | @syednizamdeen | ............ pic.twitter.com/E1CJsJETXX
— Arunchinna (@iamarunchinna) April 1, 2022
இருவரும் ஒருவருக்கு ஒருவர் மீது பல்வேறு புகார்களை அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பாலாஜி மீது மனைவி நித்தியா பாலாஜி குடி போதையில் வீட்டு வந்து தொல்லை கொடுப்பதாகவும், ஜன்னல் கதவுகளை உடைத்து தொந்தரவு செய்வதாகவும் புகார் கொடுத்தார். மேலும் செல்போன் மூலம் தவறாக பேசுவதாகவும் அதன் ஆடியோ தன்னிடம் உள்ளதாகவும் தெரிவித்து வந்தார்.
இப்படி ஒருவருக்கு ஒருவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடிக்கி வந்த சூழலில் தாடி பாலாஜி குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதில் ”மனைவியின் பிடியில் இருந்து மகளை மீட்டுத்தரவேண்டும் எனவும், மனைவியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவு தெரிவித்துள்ளார்.
மேலும் “ இருவருக்கு சண்டை ஏற்பட்டு 2017-ம் ஆண்டு பிரிந்துவிட்டோம். என்னுடைய மகள் என் மனைவியின் பராமரிப்பில் இருந்துவருகிறார். மகளை பள்ளிக்கு செல்லவிடாமல் தடுக்கிறார். குழந்தைக்கு பிடிக்காத விஷயங்களை செய்துவருகிறார். தவறான வழிகாட்டுதலின் படி மகளின் மூலம் நித்யா பணம் பறிக்க நினைக்கிறார். மகளின் எதிர்காலத்தை சிதைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் என்னை பற்றி தவறாக பேசிவருகிறார். எனவே இதனை தடுத்து நித்தியா மீது நடவடிக்க எடுக்க வேண்டும்” என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் பாலாஜி.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai Chithirai Festival : சித்திரை திருவிழா முகூர்த்தக்கால் நடும் விழா நிகழ்வுடன், கோலாகலமாக தொடக்கம்..