மேலும் அறிய

கரூரில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை - மகளிர் விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கரூரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றவாளிக்கு 20 ஆண்டுகால சிறை தண்டனை வழங்கிய கரூர் நீதிமன்றம் -ரயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்த டெக்ஸ்டைல்ஸ் தொழிலாளி போலீசார் விசாரணை.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சீரங்கக்கவுண்டனூரை சேர்ந்தவர் பாபு. இவர் மகன் ஜெயராமன் (20). இவர் அப்பகுதியில் உள்ள சலூன் கடையில் பணியாற்றி வந்தார். அப்போது அக்கடை  உரிமையாளரின் 16 வயதுடைய பிளஸ் 2 படிக்கும் மாணவியான அவரது பேத்தியுடன் நேரிலும், போனிலும் பேசி பழகி வந்துள்ளார்.  மேலும், திருமணம் செய்துக்கொள்வதாக கூறி கடந்த 2021 ம்  ஆண்டு ஜனவரி 11 ம் தேதி தேதி அச்சிறுமியை ஈரோடு மாவட்டம், பெரியவலசுக்கு அழைத்து சென்று அங்கு வாடகை வீடு எடுத்து தங்கியிருந்துள்ளனர். அப்போது சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார்.

கரூரில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை - மகளிர் விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இதுகுறித்து சிறுமியின் தந்தை அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸார் ஜெயராமன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இவ்வழக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், ஜெயராமன் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு  தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை நேற்று விசாரணை செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை  ஜெயராமனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கரூரில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை - மகளிர் விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அதன் பிறகு இவ்வழக்கில் கரூர் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி நசீமாபானு வழங்கிய தீர்ப்பில், மாணவியை கடத்தி சென்ற குற்றத்திற்காக 10 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், மேலும் ரூ.1,000 அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் ஒராண்டு சிறைத்தண்டனை, போக்சோ (குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து தடுக்கும்) சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், மேலும் ரூ.1,000 அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் ஒராண்டு  சிறைதண்டனை வழங்கியும், இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.

கரூரில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை - மகளிர் விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

வெங்கமேடு அருகே ரயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்த டெக்ஸ்டைல்ஸ் தொழிலாளி உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் மாவட்டம், வெங்கமேடு அருகே குளத்துப்பாளையம் ரயில்வே தண்வாளத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் பிணமாக கிடந்தார். இதை கண்ட அப்பபகுதி பொதுமக்கள் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பெயரில் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர் வெங்கமேடு விவிஜி நகரை சேர்ந்த சௌந்தர்ராஜன் வயது 46 என்பதும் அவர் ஒரு டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும், தற்போது சரியாக வேலை கிடைக்காமல் இருந்து வந்த நிலையில் அவர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.

கரூரில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை - மகளிர் விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இதையடுத்து போலீசார் சௌந்தரராஜன் உடலை பிரேத பரிசோதனைக்காக காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து சௌந்தரராஜன் ரயின் முன் பாய்ந்த தற்கொலை செய்து செய்து கொண்டாரா அல்லது ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி இருந்தாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணத்தில்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் டெக்ஸ்டைல்ஸ் தொழிலாளி ஒருவர் சடலமாக மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PMK ADMK alliance: அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
திமுக அமைச்சர் ஒருவரையும் விட்டுவிடக்கூடாது.! இபிஎஸ் திடீர் டெல்லி பயணம்.. அலறும் ஆளுங்கட்சி
திமுக அமைச்சர் ஒருவரையும் விட்டுவிடக்கூடாது.! இபிஎஸ் திடீர் டெல்லி பயணம்.. அலறும் ஆளுங்கட்சி
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
’’அரசு ஊழியர்களே முழிச்சுக்கோங்க; 3ஆம் நாளிலேயே பல்லிளித்த தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம்’’- அன்புமணி எச்சரிக்கை
’’அரசு ஊழியர்களே முழிச்சுக்கோங்க; 3ஆம் நாளிலேயே பல்லிளித்த தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம்’’- அன்புமணி எச்சரிக்கை
ABP Premium

வீடியோ

தங்கத்தை ஓரம் கட்டிய வெள்ளி இனிமே லட்சத்தில் லாபம் பின்னணியில் CHINA, ENGLAND | Silver Price Hike Reason
Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK ADMK alliance: அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
திமுக அமைச்சர் ஒருவரையும் விட்டுவிடக்கூடாது.! இபிஎஸ் திடீர் டெல்லி பயணம்.. அலறும் ஆளுங்கட்சி
திமுக அமைச்சர் ஒருவரையும் விட்டுவிடக்கூடாது.! இபிஎஸ் திடீர் டெல்லி பயணம்.. அலறும் ஆளுங்கட்சி
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
’’அரசு ஊழியர்களே முழிச்சுக்கோங்க; 3ஆம் நாளிலேயே பல்லிளித்த தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம்’’- அன்புமணி எச்சரிக்கை
’’அரசு ஊழியர்களே முழிச்சுக்கோங்க; 3ஆம் நாளிலேயே பல்லிளித்த தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம்’’- அன்புமணி எச்சரிக்கை
Top 10 News Headlines: திண்டுக்கல்லில் ஸ்டாலின், நில்லாமல் ஏறும் தங்கம் விலை, மீண்டும் ISL- 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: திண்டுக்கல்லில் ஸ்டாலின், நில்லாமல் ஏறும் தங்கம் விலை, மீண்டும் ISL- 11 மணி வரை இன்று
ICC BCB: ”இந்தியாவில் விளையாடுங்க, இல்லைன்னா கிளம்புங்க” - வங்கதேசத்திற்கு ஷாக் தந்த ஐசிசி - ரிப்போர்ட்
ICC BCB: ”இந்தியாவில் விளையாடுங்க, இல்லைன்னா கிளம்புங்க” - வங்கதேசத்திற்கு ஷாக் தந்த ஐசிசி - ரிப்போர்ட்
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
மீண்டும் அதிமுகவுடன் கை கோர்த்த அன்புமணி.! திமுகவிற்கு டஃப் கொடுக்க இபிஎஸ் போட்ட செம திட்டம்
மீண்டும் அதிமுகவுடன் கை கோர்த்த அன்புமணி.! திமுகவிற்கு டஃப் கொடுக்க இபிஎஸ் போட்ட செம திட்டம்
Embed widget