Crime: பெரும் சோகம்.. இருசக்கர வாகனத்தின் மீது மோதிய அரசுப்பேருந்து.. தந்தை, தாய், மகள் மரணம்..!
வந்தவாசி அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் தந்தை மகள் மனைவி ஆகிய மூன்று பேர் பலி போலீசார் விசாரணை.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தேத்துறை கிராமத்தில் வந்தவாசி காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் அரசு பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தந்தை மகள் இரண்டு பேர் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தனர்.
இரு சக்கர வாகனம் - அரசுப்பேருந்து விபத்து:
காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் வயது (40) இவர் சென்னை மாநகர பேருந்து ஓட்டுனர். இவருடைய மனைவி பிரியா வயது (35) இவர்களுடைய மகள் திலக்ஷனா வயது (6) இவர்கள் மூன்று பேரும் ரமேஷின் சொந்த ஊரான செஞ்சி அடுத்த நகலூரில் நேற்று நடந்த கோவில் திருவிழாவிற்கு சென்றுள்ளனர்.
இதற்கு தந்தை மனைவி மகள் இவர்கள் மூன்று பேரும் இருச்சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். திருவிழா முடிந்து ரமேஷ் அவருடைய மனைவி மகள் ஆகிய மூன்று பேரும் இருச்சக்கர வாகனத்தில் காலையிலேயே வந்தவாசியில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது செய்யாறு அடுத்த தேத்துறை கிராமம் அருகே சென்ற போது காஞ்சிபுரத்திலிருந்து புதுச்சேரிக்குச் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற அரசு பேருந்து ரமேஷின் இருச்சக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
தந்தை, மகள், தாய் உயிரிழப்பு:
இதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ரமேஷ் மற்றும் அவரது மகள் திலக்ஷனா ஆகியோர் தூக்கி வீசப்பட்டு சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக பலியானார். பேருந்தில் இருந்து பயணிகள் கீழே இறங்கி பார்த்துள்ளனர். அப்போது ரத்த வெள்ளத்தில் பிரியா மட்டும் படுகாயம் அடைந்துள்ளார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பிரியா உயிரிழந்தார்.
இது குறித்து அங்கு இருந்தவர்கள் அனக்காவூர் காவல் நிலையத்திள்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
பெரும் சோகம்:
இந்த சம்பவம் குறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் கூறுகையில் இருச்சக்கர வாகனத்தில் சென்றவர்கள் சரியாக தான் சென்றனர். ஆனால் அரசு பேருந்து மற்றொரு வாகனத்தை முந்தி செல்லும் பொழுது எதிர்பாராத விதமாக அரசு பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது என தெரிவித்தார்கள். வந்தவாசி அருகே அரசு பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.