Abp nadu impact: தந்தூரியால் உயிரிழந்த மாணவன்? திடீரென களமிறங்கிய அதிகாரிகள்! கிலோ கணக்கில் சிக்கிய சிக்கன்!
ஆரணியில் சிக்கன் தந்தூரி சாப்பிட்டு பிளஸ்-2 மாணவன் பலியான சம்பவம் எதிரொலியாக அசைவ உணவகத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரி திடிரென ஆய்வு மேற்கொண்டார்.
ஆரணியில் சிக்கன் தந்தூரி சாப்பிட்டு பிளஸ்-2 மாணவன் பலியான சம்பவம் எதிரொலி அசைவ உணவகத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரி திடிரென ஆய்வு மேற்கொண்டார். இதில் காலவதியான 2 கிலோ சிக்கன் இறைச்சி பறிமுதல் செய்து அழித்தனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சி மோகனன் தெருவை சேர்ந்த ஆப்பிள் பள்ளியின் உரிமையாளர் கணேஷ் (எ) ஆப்பிள் கணேஷ் இவருக்கு திருமுருகன் வயது (17) மற்றும் கோகுல் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் திருமுருகன் என்பவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். தற்போது 12ம் வகுப்பு தேர்வு முடித்து விட்டு கடந்த 24ந் தேதி நண்பர்களுடன் ஆரணி நகர் பகுதியில் காந்தி ரோட்டில் உள்ள 5 ஸ்டார் எலைட் என்ற அசைவ உணவகத்தில் நண்பர்களுடன் அசைவ உணவு சிக்கன் 65, தந்தூரி சிக்கன் மற்றும் பிரைஸ் ரைஸ் போன்ற அசைவ உணவுகள் சாப்பிட்டுள்ளனர்.
மேலும் அன்று இரவு முழுவதும் திருமுருகன் வயிற்று வலி வாந்தி ஏற்பட்டு பாதிப்படைந்துள்ளார். உடனடியாக திருமுருகனின் பெற்றோர் மறுநாள் காலையில் வீட்டின் அருகே உள்ள தனியார் கிளினிக்கில் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால் திருமருகனுக்கு வயிற்று வலி வாந்தி தொடர்ந்து தொந்தரவு ஏற்பட்டதால் நாளடைவில் சோர்வடைந்துள்ளார். இந்நிலையில் கடந்த 29ம் தேதி வயிற்று வலியால் துடித்த திருமுருகன் மாணவனை மேல்சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் செல்லும் வழியிலேயே மாணவன் திருமுருகன் பரிதாபமாக உயிரழந்தார்.பின்னர் மாணவனின் சடலத்தை உடனடியாக ஆரணிக்கு கொண்டு வந்த பெற்றோர் மாணவனின் உடலை மறுநாள் காலையில் உறவினர்கள் முன்னிலையில் இடுகாட்டில் வைத்து எரித்து அடக்கம் செய்தனர்.
இதனை தொடர்ந்து நேற்று இறந்த மாணவனின் தந்தை கணேஷ் ஆரணி நகர காவல்நிலையத்திற்கு வந்து என் மகன் சாவிற்கு காரணமான 5ஸ்டார் எலிட் என்ற ஓட்டல் உரிமையாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ABP NADU நிறுவனத்தில் இருந்து கடந்த (ஜூன்30)ம் தேதி மாணவன் அசைவ உணவு சாப்பிட்டதாலும்,மேலும் ஆரணி பகுதியில் அசைவ உணவு சாப்பிட்டு ஒரு பள்ளிமாணவன் உயிரிழந்துள்ளார். ஆனால் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று செய்தி வெளியிட்டு இருந்தோம். இதன் எதிரொலியாக இன்று ஆரணி நகராட்சி ஆணையர் தமிழ்செல்வி மற்றும் ஆரணி உணவு பாதுகாப்பு அதிகாரி கைலாஷ் குமார் ஆகியோர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அசைவ உணவங்களை ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரியிடம் பேசுகையில்;
தொடர்ந்து நாங்கள் ஆரணி பகுதியில் உள்ள சைவ,அசைவ உணவகங்களை கண்காணித்து வருகிறோம். மேலும் உயிரிழந்த பள்ளி மாணவன் சாப்பிட 5 ஸடார் எலிட் என்ற அசைவ உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது அந்த உணவகத்தில் இருந்து காலவதியான 2 கிலோ அசைவ உணவு சிக்கன் இறைச்சியை பறிமுதல் செய்து அதனை அழித்தோம் இந்த கடையில் உள்ள இறைச்சியை கைப்பற்றி அதனை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளோம்.
இதன் முடிவு வந்த பின்னரே நடவடிக்கை குறித்து தெரிவிக்கபடும் என்று உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் தெரிவித்தார். ஆரணியில் ஏற்கனவே 6மாதம் முன்பு சிக்கன் பிரியாணி சாப்பிட்ட சிறுமி இறந்த சம்பவம் தொடர்ந்து தற்போது 12ம் வகுப்பு மாணவன் இறப்புக்கு பின்னர் ஆரணியில் பொதுமக்கள் அசைவ உணவை சாப்பிட அச்சத்துடன் உள்ளனர்.