திருமணமானதை மறைத்து காதலித்த பெண்...காதலன் பிரிந்ததால் தற்கொலைக்கு முயற்சி!
சென்னை புளியந்தோப்பு பகுதியில் காதலன் பிரிந்த சோகத்தில் இளம்பெண் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புளியந்தோப்பு அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் வசித்து வருபவர் சுதாகர். இவரின் மகள் மைதிலி (22) சில நாட்களாக காணவில்லை என்று கடந்த 4ம் தேதி புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மைதிலி வீட்டை விட்டு வெளியேறி தனது காதலனுடன் சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, மைதிலி மற்றும் அவரது காதலன் பிரேம்குமாரை நேற்று காவல் நிலையம் அழைத்து வந்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
இதில், மைதிலிக்கு ஏற்கனவே கோகுல் என்பவருடன் திருமணமாகி ஒரு குழந்தை இருப்பதும், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததும், இந்த விஷயத்தை மறைத்துதான் மைதிலி, பிரேம்குமாரை காதலித்து வந்ததும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து போலீசார் பிரேம்குமாரின் உறவினர்களை காவல் நிலையம் வரவழைத்து தகவலை தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பிரேம்குமாரின் உறவினர்கள், மைதிலியை பிரேம்குமாருக்கு திருமணம் செய்து வைக்க மறுத்து விட்டனர்.
இந்தநிலையில், இருவீட்டாரையும் அழைத்து சமாதானம் பேசிய காவல்துறையினர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
காதலனை தன்னிடமிருந்து பிரித்த மனவேதனையில் இருந்த மைதிலி, வீட்டில் இருந்த 70 வலி மாத்திரைகளை சாப்பிட்டு நேற்று மயங்கி கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மைதிலியின் பெற்றோர் உடனே அவரை மீட்டு ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Petrol, Diesel Price: 34 வது நாளாக ஒரே விலை.. இன்றும் மாற்றமில்லா பெட்ரோல், டீசல் விலை!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
Watch Video: ஆஷஸ் டெஸ்ட் தொடங்கியதும் சாதனை... 85 ஆண்டுகளுக்குப் பின் முதல் பந்தில் விக்கெட்!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்