மேலும் அறிய

நீ எனக்கு மட்டும் தான்.. திருமணமான பெண் வேறோருவருடன் தொடர்பு.. கொல்ல முயன்ற கள்ளக்காதலன்!

சமீபகாலமாக பத்மாவின் நடவடிக்கைகள் எதுவும் சரியில்லாமல் இருப்பதாக அஞ்சய்யாவுக்கு தோன்றியுள்ளது. அவரை ரகசியமாக கண்காணித்ததில் பத்மா வேறோரு ஆணுடன் தொடர்பில் இருப்பது தெரிய வந்தது.

தெலங்கானா மாநிலத்தில் சந்தேகத்தின் பிடியின் காரணமாக திருமணமான பெண் மீது காதலன் பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. இதுதொடப்ராக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த கொடூர சம்பவம் தெலங்கானா மாநிலத்தின் மஹபூபாபாத் மாவட்டத்தின் தலைமையகமான பிரகதி நகரில் நடைபெற்றுள்ளது. அங்கு அஞ்சய்யா என்பவர் குரவி மண்டலத்தில் உள்ள மொடுகுலகுடம் கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் மஹபூபாபாத் நகரத்தில் உள்ள விவசாய சந்தைக்கு எதிரே கடந்த சில ஆண்டுகளாக சிறு தொழில் ஒன்றை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் அஞ்சய்யாவின் மனைவி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் உடல்நலக்குறைவால் காலமானார். இதனால் தனிமையில் தவித்து வந்த அவருக்கு பனோத் பத்மா என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்துள்ளது. 

இவர்களின் உறவு ஒரு கட்டத்தில் திருமணத்தை மீறிய உறவாக மாறியது. அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமான நிலையில் அஞ்சய்யாவுடன் தொடர்பில் இருந்தார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நேரம் செலவிட்டு வந்தனர். பத்மாவுக்கு கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், அஞ்சய்யாவுக்கு ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். எனினும் இவர்கள் உறவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றது.

காதலி மீது சந்தேகம்

இந்த நிலையில் சமீபகாலமாக பத்மாவின் நடவடிக்கைகள் எதுவும் சரியில்லாமல் இருப்பதாக அஞ்சய்யாவுக்கு தோன்றியுள்ளது. அவரை ரகசியமாக கண்காணித்ததில் பத்மா வேறோரு ஆணுடன் தொடர்பில் இருப்பது தெரிய வந்தது. தன்னைத் தவிர வேறு ஒருவருடன் பத்மா உறவில் இருப்பதை அஞ்சய்யாவால் தாங்கி கொள்ள முடியவில்லை. இதுதொடர்பாக விளக்கம் கேட்டபோது பத்மா அவரை உதாசீனப்படுத்தியுள்ளார்.

இப்படியான நிலையில் பத்மாவை தண்டிக்க நினைத்த அஞ்சய்யா அதற்கான தக்க தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அப்படியாக மஹபூபாபாத் பகுதியில் உள்ள பிரகதி நகரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு பத்மா வந்தார். இதனை அறிந்துக் கொண்ட அஞ்சய்யா நேராக அங்கு சென்று வேறோரு ஆணுடன் தொடர்பில் இருப்பது குறித்து கடுமையாக பிரச்னை செய்துள்ளார். இதில் இருவருக்குமிடையே தகராறு முற்றவே தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் பாட்டிலை எடுத்து பத்மா மீது ஊற்றிய அஞ்சய்யா சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் தீ வைத்து கொலை செய்ய முயன்றார். 

மேலும் மீதமிருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார். படுகாயமடைந்த இருவரும் வலியால் அலறி துடித்த நிலையில் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அஞ்சய்யா, பத்மா ஆகிய இருவரையும் மீட்டு மஹபூபாபாத் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இரண்டு பேரும் உயிருக்குப் போராடி வரும் நிலையில் மஹபூபாபாத் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசார்ணை நடத்தி வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Tasmac liquor online : மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்.? விளக்க வீடியோ இதோ..
மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்.? விளக்க வீடியோ இதோ..
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
Embed widget