மேலும் அறிய
Advertisement
காஞ்சிபுரம் : பாலியல் தொழிலில் பணத் தகராறு.. வடமாநில இளைஞரை கொன்று புதைத்த கும்பல்
பாலியல் தொழிலில் பணத் தகராறில் வட மாநில இளைஞரை 5 பேர் கொண்ட கும்பல் அடித்து கொன்று புதைத்துள்ளனர்.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இஸ்ரேல் சாகா (34), இஸ்மாயில் (30). இவர்கள் இருவரும் ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் உள்ள ஹோட்டலில் பணிபுரிந்து வருகிறார். இஸ்ரேல் சாகா இவர் கடந்த மாதம் 18 ஆம் தேதி நண்பர்களிடம் பணம் வாங்க செல்வதாக, பணிபுரிந்து கொண்டிருந்த ஓட்டலில் இருந்து சென்னை சென்றுள்ளார். அவ்வாறு சென்ற இஸ்ரேல் சாகா பின்பு மாயமாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் சாகா காணவில்லை என ராணிப்பேட்டை மாவட்டம் , காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில், காணவில்லை என சகோதரர் புகார் அளித்தார், இதனைத்தொடர்ந்து, புகாரை பெற்றுக் பெற்றுக்கொண்ட போலீசார் விசாரணையை துவங்கினர்.
இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஜோதி உயர்தர உணவகத்தில் 15.7.21 அன்று புதிதாக வேலைக்கு இணைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அன்று தனக்குத் தெரிந்த ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு, ஸ்ரீ பெரும்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தண்டலம் பேருந்து நிலையம் வந்தடைந்துள்ளர்.
இதனைத் தொடர்ந்து ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் குருதேவ் என்பவர், இவர்களை மேவலுர் குப்பம் ஏரிக்கரை பகுதியிலுள்ள உள்ள தனி வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார் . அங்கு பலமுறை பாலியல் வழக்கில் ஸ்ரீ பெரும்புதூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு பல முறை சிறை சென்ற மேற்கு வங்கத்தைச் சார்ந்த திப்பு (47) இவரை சந்தித்துள்ளார். இவருடன் திருவள்ளூர் மாவட்டம் படூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ் (28 ),ஜெயக்குமார் ( 30 ), ரஞ்சித் ( 32 ), ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர்.
மேற்கு வங்காளம் பகுதியை சேர்ந்த திப்பு தனிமையாக உள்ள வீட்டில் உள்ளூர் நபர்கள் துணையுடன் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்துள்ளார். இவரிடம் இஸ்ரேல் சாகா தனக்கு தெரிந்த பெண்ணை அறிமுகம் செய்துவிட்டு, அதற்காக இவரிடம் இருந்து பணம் கேட்டுள்ளார், இவ்வாறு இவர்கள் இதுபோன்ற பரிவர்த்தனையில் பலமுறை ஈடுபட்டதாக தெரிகிறது .
இந்நிலையில் அன்று அவ்வாறு மீண்டும் அந்தப் பெண்ணை அவர்களிடம் ஒப்படைக்கும்போது, பணம் குறித்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பணவிஷயத்தில் இஸ்ரேல் சாகா தொடர்ந்து கராராக இருந்துள்ளார். வாய்த்தகராறு திடீரென்று கைகலப்பாக மாறியது. அதில் திப்பு, ராஜ், அஜித்குமார்(23), குருதேவ், ஜெயக்குமார், ரஞ்சித் ஆகியோர் இஸ்ரேல் சாகாவை சரமாரியாக அடித்து கொலை செய்து மேவலூர் குப்பம் கிராமம் கிருஷ்ணா கால்வாய் அருகில் இஸ்ரேல் சாகாவை புதைத்துள்ளனர்.
இந்நிலையில் இஸ்ரேல் சாகாவின் தம்பி அளித்த புகாரின் அடிப்படையில் இஸ்ரேலை போலீசார் தேடி வந்தனர் . இஸ்ரேல் செல்பேசியை பயன்படுத்தி போலீசார் அவரைத் தேடியபோது குறிப்பிட்ட நபர்களிடம் அவர் தொடர்ந்து பேசியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் பாலியல் தொழில் விவகாரத்தில் பணம் கொடுக்கும் பொழுது ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஐந்து பேரும் இணைந்து இஸ்ரேலை அடித்துக்கொன்றோம் என வாக்குமூலம் அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து இஸ்ரேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக 5 நபர்களையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்திய பின்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பாலியல் தொழில் விவகாரத்தில் பணத்தை கை மாற்றும் போது நடைபெற்ற, கொலை சம்பவம் ஸ்ரீபெரும்புதூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
கிரிக்கெட்
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion