மேலும் அறிய

Crime: ஜாமீனில் எடுத்த வக்கீலை வெட்டிக்கொல்ல முயன்ற பிரபல ரவுடி... சேலத்தில் பரபரப்பு.

எதற்காக அவர் வெட்டினார் என்பது தொடர்பாக சிகிச்சையில் உள்ள வக்கீலிடம், கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாநகர் சின்னதிருப்பதி புதிய குருக்கள் காலனியை சேர்ந்தவர் ஆஷித்கான். இவர், சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வக்கீலாக உள்ளார். இவரது மனைவி பத்மபிரியா. இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்தனர். அப்போது, அவரது கட்சிக்காரர் பிரபல ரவுடியான செவ்வாய்பேட்டை லட்சுமி அய்யர் தெருவை சேர்ந்த ஜோசப் (எ) பாலாஜி வந்துள்ளார். அவர், வக்கீல் ஆஷித்கானிடம் பேசிக் கொண்டிருந்துள்ளார். சிறிது நேரத்தில் திடீரென வக்கீல் ஆஷித்கானிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதோடு, பெரிய கத்தியால் கழுத்தில் வெட்டினார். அப்போது அவரது மனைவி பத்மபிரியா தடுக்க வந்துள்ளார். அவருக்கு கையில் வெட்டு விழுந்தது. உடனே அவர்கள் இருவரும் அலறியபடி கூச்சலிட்டனர். இதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர்.

வக்கீலையும், அவரது மனைவியையும் வெட்டிய ரவுடி பாலாஜி, தான் வந்த பைக்கில் மின்னல் வேகத்தில் தப்பினார். பின்னர், பலத்த வெட்டு காயமடைந்து கிடந்த வக்கீல் ஆஷித்கான், அவரது மனைவி பத்மபிரியாவை மீட்டு அம்மாபேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுபற்றி தகவல் அறிந்த கன்னங்குறிச்சி எஸ்ஐ முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் சசிகலா விசாரணை நடத்தி, வக்கீல், அவரது மனைவியை வெட்டிய ரவுடி பாலாஜி மீது கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தார்.

Crime: ஜாமீனில் எடுத்த வக்கீலை வெட்டிக்கொல்ல முயன்ற பிரபல ரவுடி... சேலத்தில் பரபரப்பு.

விசாரணையில், பிரபல ரவுடியான பாலாஜி மீது தர்மபுரியில் இரட்டை கொலை வழக்கும், சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியில் ஒரு கொலை வழக்கும், செவ்வாய்பேட்டை போலீசில் வழிப்பறி வழக்கும் நிலுவையில் உள்ளது. ஒருமுறை குண்டர் தடுப்பு காவலில் பாலாஜியை போலீசார் சிறை வைத்துள்ளனர். இந்த கொலை வழக்குகளையும், வழிப்பறி வழக்கையும் வக்கீல் ஆஷித்கான் நடத்தி வந்துள்ளார். சிறையில் இருந்த ரவுடி பாலாஜியை ஜாமீனில் வெளியே எடுத்து விட்டுள்ளார்.

இச்சூழலில் வக்கீலின் வீட்டிற்கு வந்த ரவுடி பாலாஜி, அவரிடம் தகராறில் ஈடுபட்டு வெட்டி கொல்ல முயன்றுள்ளார் எனத் தெரியவந்துள்ளது. எதற்காக அவர் வெட்டினார் என்பது தொடர்பாக சிகிச்சையில் உள்ள வக்கீல் ஆஷித்கானிடம், கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேநேரத்தில் தப்பியோடி தலைமறைவான ரவுடி பாலாஜியை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். ஜாமீனில் எடுத்து விட்ட வக்கீலை பிரபல ரவுடி வெட்டிக் கொல்ல முயன்ற சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

கலெக்டர் ஸ்ரீகாந்த் ஐஏஎஸ் அதிரடி! மயிலாடுதுறையில் 29 வாகனங்கள் பறிமுதல்..! 
கலெக்டர் ஸ்ரீகாந்த் ஐஏஎஸ் அதிரடி! மயிலாடுதுறையில் 29 வாகனங்கள் பறிமுதல்..! 
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
Kanyakumari District Holiday : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Embed widget