‛நீ மாஸ்க்குனா... நான் மாஸ்...’ குடிபோதையில் நடத்துனரிடம் ரகளை: சிறையில் அறை ஒதுக்கிய போலீஸ்!
சிங்கப்பூரைச் சேர்ந்த இந்திய வம்சாவளி நபர் ஒருவர், குடிபோதையில் பொது இடத்தில் மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுத்ததற்காக 5 வாரங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிங்கப்பூரைச் சேர்ந்த இந்திய வம்சாவளி நபர் ஒருவர், குடிபோதையில் பொது இடத்தில் மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுத்ததற்காக 5 வாரங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிங்கப்பூரைச் சேர்ந்த இந்திய வம்சாவளி நபர் மூர்த்தி. இவருக்கு வயது 65. இவர் கடந்த மார்ச் 28ஆம் தேதி லிட்டில் இந்தியாவில் உள்ள டெக்கா மார்க்கெட்டில் ஒரு பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது அவர் முகக்கவசம் அணியவில்லை எனத் தெரிகிறது. இதைபார்த்த 33 வயதுள்ள பேருந்து ஓட்டுநர் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இதனால் குடிபோதையில் இருந்த மூர்த்தி ஆத்திரமடைந்து ஓட்டுநரை அநாகரீகமாக திட்டியுள்ளார். இதுகுறித்து ஓட்டுநர் போலீசாருக்கு தகவல் கொடுக்க விரைந்து வந்த போலீசார் மூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மூர்த்தியை கைது செய்து அவருக்கு நீதிமன்றம் 5 வாரம் சிறை தண்டனை அளித்து தீர்ப்பளித்தது.
இதற்கு முன்னதாக ஏற்கெனவே மூர்த்தி குடிபோதையில் தகராறு செய்ததற்காக 1000 சிங்கப்பூர் டாலர் அபராதமாக கட்டியுள்ளார். இச்சம்பவம் நடந்த சில மாதங்களிலேயே மீண்டும் மூர்த்தி இதுபோன்று அநாகரீகமாக நடந்துள்ளார்.
இந்த ஆண்டு வெவ்வேறு சம்பவங்களில், அவர் குடிபோதையில் இருந்தபோது ஒரு போலீஸ் அதிகாரியையும் பஸ் டிரைவரையும் மோசமான வார்த்தைகளில் மூர்த்தி திட்டியுள்ளார். இதனால் மூர்த்திக்கு கடந்த திங்கள் கிழமை 5 வாரங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
சிங்கப்பூர் சட்டப்படி, ஒவ்வொரு துன்புறுத்தலுக்கும், ஒரு குற்றவாளிக்கு ஒரு வருடம் வரை சிறை தண்டனை மற்றும் 5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். சிங்கப்பூர் நாளிதழின் அறிக்கையின்படி, இரண்டு மாதங்களுக்குப் பிறகு மே 29 அன்று அவர் மீண்டும் டெக்க்கா மார்க்கெட் அருகே குடிபோதையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வழியாக செல்பவர்களை அவர் தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த போலீசார் அவருக்கு எச்சரிக்கை விடுத்தும் அவர் கேட்கவில்லை.
சார்ஜென்ட் ஜெய்சன் சோங் ஜுன் கிட், 25, மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். மூர்த்தியை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தினர். ஆனால் மூர்த்தி போலீசாரையே தகாத வார்த்தையால் திட்டியுள்ளார்.
இதுகுறித்து போலீசார் தரப்பில் நீதிமன்றத்தில் கூறுகையில், “டெக்கா மார்க்கெட், சிராங்கூன் சாலையில் உள்ள பேருந்து நிலையத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் தகராறு செய்துகொண்டிருந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் சார்ஜெண்ட் ஜெய்சன் சோங் ஜூன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். குற்றம்சாட்டப்பட்டவரை அங்கிருந்து வெளியேறுமாறு கூறினர். ஆனால் அவர் போலீசாரையும் தகாத வார்த்தையால் திட்டினார். இதையடுத்து அவரை போலீசார் போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். வாகனத்தின் புன்புறம் உட்காந்துகொண்டு குற்றம்சாட்டப்பட்டவர் சார்ஜென்ட் சோங்கை அநாகரீகமான வார்த்தைகளால் திட்டி, கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டினார். உட்னே மூர்த்தி மத்திய காவல் பிரிவில் காவலில் வைக்கத் தகுதியானவரா என்பதை உறுதி செய்வதற்காக மருத்துவ பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டது.
செய்த தவறை மூர்த்தி ஒப்புக்கொண்டதையடுத்து அவருக்கு 5 வாரம் சிறைதண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.