மேலும் அறிய
Advertisement
40 காவலர்கள் கூண்டோடு தென் மாவட்டத்திற்கு மாற்றம்... என்ன நடக்கிறது காஞ்சிபுரத்தில்?
படப்பை குணாவிற்கு உதவி செய்தார்களா என்ற சந்தேகத்தில் 40 காவலர்கள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
எங்கெல்லாம் தொழில் நிறுவனங்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் ரவுடிகளும் உருவாகிறார்கள். சின்ன ரவுடிகளாக இருக்கும் அவர்கள் தொழில் நிறுவனங்களை மிரட்டி மாமூல் வாங்கி, பெரிய காசை பார்த்தவுடன் பத்து பேரை கூட்டு சேர்த்துக்கொண்டு பெரிய தாதாக்களாக மாறிவிடுகின்றனர் அப்படியான ஒருவர் தான் படப்பை குணா. இவர் படப்பை, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலுள்ள தொழில் நிறுவனங்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் தன்னுடைய சாம்ராஜ்யத்தை நிறுவியுள்ளார். தனக்கு கீழ் செயல்படும் கிளை ரவுடிகளைக் கொண்டு மிரட்டி அங்குள்ள தொழில் நிறுவனங்களில் பெரும் பணத்தை சுருட்டி வந்தார். கட்டப்பஞ்சாயத்து, அடிதடியிலும் ஈடுபட்டு வந்தார். இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் என 40க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனாலும் இவருடைய கொட்டம் அடங்கியபாடில்லை.
இதற்கு முடிவுகட்ட நிறுவனங்கள் ஒன்றுசேர்ந்து அரசிடம் முறையிட்டன. படப்பை குணாவின் ரவுடியிசத்துக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் இல்லையென்றால் நாங்கள் தொழில் செய்ய முடியாது என அழாத குறையாக மன்றாட, காவல் துறையை களமிறக்கியது அரசு. அதன் ஒருபகுதியாக தான் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரையை காவல்துறை தலைமை வரவழைத்தது. அவர் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைத்து படப்பை குணா, அவருடைய ஆதரவாளர்கள் என பலரையும் கைது செய்யும் டாஸ்க் வெள்ளத்துரையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து படப்பை குணா தலைமறைவானார்.
அவரை கண்டுபிடிக்க முடியாத நிலையில், குணாவின் மனைவி எல்லம்மாளை வெள்ளத்துரை தலைமையிலான தனிப்படை கைது செய்தது. தலைமறைவாகியுள்ள குணாவை என்கவுண்டர் செய்ய காவல் துறை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. உடனே சென்னை உயர் நீதிமன்றத்தில் எல்லம்மாள் வழக்கு தொடர்ந்தார். தன்னுடைய கணவரை என்கவுண்டர் செய்ய காவல் துறை திட்டமிட்டிருப்பதாக முறையிட்டார். ஆனால் காவல் துறை மறுக்கவே அவரின் மனுவை தள்ளுபடி செய்தது. இச்சூழலில் 40 காவல்துறையினர் இடமாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
மாவட்டம் முழுவதும் இருந்து ஒரே நேரத்தில் 40 காவலர்கள் பணியிடமாற்றம் செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவலர்கள் அனைவரும் தென் மாவட்டத்திற்கு தூக்கி அடிக்கப்பட்டு இருப்பது காவலர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் உட்பட 17 காவலர்கள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் உட்பட 14 பேர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்திற்கு நான்கு காவலர்களும் மாற்றப்பட்டுள்ளனர். முன்னதாக மூன்று காவல் ஆய்வாளர்கள் மதுரை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து விபரம் அறிந்தவர்கள் கூறுகையில், தற்பொழுது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள அனைத்து காவலர்களும் குணாவிற்கு உதவி செய்தார்கள் எனக் கூற முடியாது. காவலர்கள் குணாவிற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவி செய்திருக்கலாம் என சந்தேகத்தின் பேரிலேயே அவர்கள் வட மாவட்டங்களில் இருந்து தென் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர் என தெரிவித்தனர். மேலும் பல காவலர்கள் இடமாற்றம் செய்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தனர்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion