மேலும் அறிய
Advertisement
ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சா; மதுரையில் விற்பனை செய்த 3 பெண்கள் கைது - 22 கிலோ கஞ்சா பறிமுதல்
ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து மதுரையில் விற்பனை செய்த 3 பெண்களை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனையை ஒழிப்பதற்கு மாவட்ட காவல் துறையால் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், கைது செய்தும், கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளை பறிமுதல் செய்தும், சட்டப்படியான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.
அவ்வாறு எடுக்கப்படும் நடவடிக்கைகளில் மிக முக்கியமானதாக கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களை கட்டுப்படுத்தும் விதமாக அக்குற்றவாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகளை முடக்கம் செய்யப்பட்டும், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மதுரை எழுமலை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட மானூத்து முனியாண்டி கோயில் மொட்டைபாறை அருகே கஞ்சா விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து எழுமலை காவல்துறையினரின் சோதனையில், ஆந்திராவில் இருந்து 22 கிலோ கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்து வந்த மானூத்து பகுதியை சேர்ந்த பவுன்தாய்(56), வடக்குத் தெருவை சேர்ந்த பிராபாவதி (எ) பேச்சியம்மாள்(34), பேச்சியம்மாள்(45) ஆகிய 3 பெண்களை கைது செய்து சுமார் 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளதாக மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத் தகவல் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர், பதுக்குவோர் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - தாசில்தாரை தாக்கிய வழக்கு: மு.க. அழகிரி உள்ளிட்ட 20 பேர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்
மேலும் செய்திகள் படிக்க - சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு ; ஆய்வாளர் பணியில் இருந்தார் என நீதிமன்றத்தில் காவலர் ரேவதி சாட்சியம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion