மேலும் அறிய

தி.மலை: அண்ணன்- தம்பி உள்பட 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு..! ஏரியில் குளிக்கச் சென்றபோது பரிதாபம்..!

கலசப்பாக்கம் அருகே ஏரியில் குளிக்க சென்ற அண்ணன்- தம்பி உள்பட 3 மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் ஒரு சிறுவன் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தை அடுத்த லாடவரம் ஊராட்சிக்கு உட்பட்ட கெங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணதாசன் இவர் பெயிண்டராக பணியாற்றி வருகிறார்.  இவருடைய மகன்கள் அருள் வயது (10), அஜித் வயது (9), சந்திப் வயது (7). அருள் 5-ம் வகுப்பும், அஜித் 4-ம் வகுப்பும், சந்திப் 2-ம் வகுப்பும் லாடவரம் அரசு நடுநிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.

அதே கிராமத்தைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். இவர் விவசாயம் செய்து வருகின்றார். இவருக்கு ஒரே மகன் ஜீவன் குமார் வயது (8). இவன் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலையில் வழக்கம் போல் வீட்டில் இருந்து நான்கு பேரும் பள்ளிக்கு சென்றுள்ளனர். பள்ளியில் இருந்து 4 மாணவர்களும்  வீட்டுக்கு வந்துள்ளனர். அதனைத்தொடர்ந்து  4 பேரும் வீட்டிற்கு வரும் வழியில் நாம் அனைவரும் ஏரிக்கு குளிக்க செல்லாம் என்று பேசிக்கொண்டதாக கூறப்படுகிறது.

தி.மலை: அண்ணன்- தம்பி உள்பட 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு..! ஏரியில் குளிக்கச் சென்றபோது பரிதாபம்..!

அதனைத்தொடர்ந்து வீட்டிற்கு சென்ற மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து அதேப் பகுதியில் உள்ள ஏரியில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது 4 மாணவர்களும் ஒரு மாணவன் பள்ளத்தில் தவறி விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. அந்த மாணவனை  காப்பாற்றுவதற்காக முயன்றுள்ளனர். அப்போது ஒருவர் பின் ஒருவராக நான்கு பேரும் தண்ணீரில் விழுந்து மூழ்கியுள்ளனர்.

அவர்களில் அஜித் என்ற மாணவன் மட்டும் தண்ணீரில் மிதந்தபடி கூச்சல் போட்டு உள்ளார். இதனைக்கேட்ட  அப்பகுதியை  சேர்ந்த ஒருவர் அஜித்தை மீட்டு உள்ளார். மீட்கப்பட்ட அஜித் பயந்து உடனடியாக வீட்டிற்கு ஓட்டியுள்ளார். மற்றவர்கள் தண்ணீரில் மூழ்கியது தெரியாததால் அஜித்தை மீட்டவரும் அங்கிருந்து சென்றுவிட்டார். இரவு 7 மணிக்கு மேல் ஆகியும்  அருள், சந்தீப், ஜீவன்குமார் ஆகிய மூன்று  மாணவர்களும் வீட்டுக்கு வராததால் பெற்றோர்கள் தேடத் தொடங்கினர். அப்போது தான் அந்த மூன்று மாணவர்களும் தண்ணீரில் மூழ்கியது தெரியவந்துள்ளது. உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் போளூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தி.மலை: அண்ணன்- தம்பி உள்பட 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு..! ஏரியில் குளிக்கச் சென்றபோது பரிதாபம்..!

 தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரில் மூழ்கிய அருள், அவனது தம்பி சந்திப் மற்றும் ஜீவன் குமார் ஆகிய மூன்று பேரையும் சடலமாக மீட்டனர். இதை பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் கலசப்பாக்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த 3 மாணவர்களின் உடலை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கெங்கநல்லூர் கிராமத்தில் உள்ள ஏரியில் விவசாயத்திற்கு ஏரியில் வண்டல் மண் எடுக்க அளிக்கப்பட்ட அனுமதியை பயண்படுத்தி சில கட்சி பிரமுகர்கள் அதிக அளவில் ஆழமாகவும் வண்டல் மண் அள்ளி மண்னை செங்கல் சூளைக்கு பயண்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தற்போது பெய்த வடகிழக்கு பருவமழையால் ஏரிகயில் தண்ணீர் நிரம்பியுள்ளது. அதிக அளவில் தோண்டப்பட்ட இடத்தை அறியாத மாணவர்கள் அதில் மாட்டிக்கொண்டு உயிரிழந்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
ஏ.ஆர்.ரஹ்மான் பாரபட்சமும், வெறுப்பும் கொண்ட மனிதர்.. கங்கனா ரணாவத் பகீர் குற்றச்சாட்டு!
ஏ.ஆர்.ரஹ்மான் பாரபட்சமும், வெறுப்பும் கொண்ட மனிதர்.. கங்கனா ரணாவத் பகீர் குற்றச்சாட்டு!
IND vs NZ: கோப்பை யாருக்கு? நாளை மல்லுகட்டும் இந்தியா - நியூசிலாந்து! ரோகித் - கோலி காம்போ கலக்குமா?
IND vs NZ: கோப்பை யாருக்கு? நாளை மல்லுகட்டும் இந்தியா - நியூசிலாந்து! ரோகித் - கோலி காம்போ கலக்குமா?
Embed widget