மேலும் அறிய

Crime: 10 ஆயிரம் பேரிடம் ரூ.800 கோடி மோசடி.. மூளையாக செயல்பட்ட 3 பெண்கள்.. நடந்தது என்ன?

சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஹிஜாவு அசோசியேட்ஸ் என்ற தொழில் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. அந்நிறுவனம் தங்களிடம் முதலீடு செய்தால் 15 சதவிகிதம் வட்டி வழங்கப்படும் என்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. 

சென்னையில் 10 ஆயிரம் பேரை ஏமாற்றி மோசடி செய்த வழக்கில் 3 முக்கிய பெண் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஹிஜாவு அசோசியேட்ஸ் என்ற தொழில் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. அந்நிறுவனம் தங்களிடம் முதலீடு செய்தால் 15 சதவிகிதம் வட்டி வழங்கப்படும் என்றும், அந்த வட்டிக்கான பணம் மாதந்தோறும் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படும் எனவும் கவர்ச்சிகரமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. 

இதனை நம்பிய பொதுமக்கள் பலரும்  ஹிஜாவு அசோசியேட்ஸ்  நிறுவனத்தில் முதலீடு செய்தனர். நாட்கள் சென்ற நிலையில் நிறுவனம் சொன்னபடி வட்டி தொகையை  மக்களுக்கு கொடுக்கவில்லை. அதேபோல் அசல் தொகையையும் சுருட்டிக் கொண்டது. இதனால் அதிர்ச்சியடைந்த  ஹிஜாவு அசோசியேட்ஸ்  நிறுவன வாடிக்கையாளர்கள் 1500 பேர் முதற்கட்டமாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கிட்டதட்ட 10 ஆயிரம் பேரிடம் இந்த மோசடி நடைபெற்றது தெரிய வந்தது. 

அதேபோல் மோசடி தொகையும் ரூ.800 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. இதற்கிடையில்  ஹிஜாவு அசோசியேட்ஸ் நிறுவனத்தில் இயக்குநர்கள் அலெக்சாண்டர், சௌந்திரராஜன் உட்பட 21 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வீடுகள் உட்பட 32 இடங்களிலும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். 

இந்த சோதனையில் வழக்கிற்கு தேவையான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் 19 குற்றவாளிகள் தலைமறைவாக இருந்த நிலையில் அவர்களை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் 3 முக்கிய பெண் குற்றவாளிகள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.

 திருவேற்காட்டை  சேர்ந்த சாந்தி, விருகம்பாக்கத்தை  சேர்ந்த கல்யாணி, அண்ணாநகரை  சேர்ந்த சுஜாதா என்ற 3 பேரும்   ஹிஜாவு அசோசியேட்ஸ் நிறுவனத்தில் முக்கிய நிர்வாகிகளாக பதவி வகித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் இவர்கள் 3 பேரும் 2,835 பேர்களிடம் ரூ.235 கோடி அளவுக்கு பணம் வசூல் செய்து கொடுத்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Embed widget