துப்பாக்கியைக் கழுத்தில் வைத்து செல்ஃபி எடுத்த புதுமணப்பெண்; குண்டு பாய்ந்து உயிரிழப்பு!
ராதிகாவிற்கு செல்ஃபி எடுப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருபவர் எனவும் விதவிதமாக செல்ஃபி எடுப்பதை எப்பொழுதும் வழக்கமாக கொண்டிருப்பார் எனக்கூறப்படுகிறது.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான பெண் விதவிதமாக செல்ஃபி எடுத்து வரும் நிலையில், துப்பாக்கி முனையில் போட்டா எடுக்க முயன்றுள்ளார். அப்பொழுது தவறுதலாக ட்ரிக்கரில் கைப்பட்டதால் குண்டு வெடித்து உயிரிழந்தச் சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம், திருவிழாக்கள் போன்ற சுப நிகழ்ச்சிகள் மட்டுமில்லாமல், புதிதாக உடை அணிந்து வந்தாலும் செல்ஃபி எடுப்பது தற்போது ஒரு கலாச்சாரமாகிவிட்டது. இந்த செல்ஃபி கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரிக்க விதவிதமாக போட்டோ எடுக்க வேண்டும் என்ற ஆசையில் பலர் உயிரிழக்கவும் நேரிடுகிறது. அப்படித்தான் உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்டோய் நகரைச்சேர்ந்த புதுமணப்பெண் வித்தியாசமாக செல்பி எடுக்க வேண்டும் என்று ஒற்றைக்குழல் துப்பாக்கியினை கழுத்தில் வைத்தப்படி போட்டோ எடுக்க முயன்றபொழுது தவறுதலாக குண்டு வெடித்து உயிரிழந்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தினைச் சேர்ந்த 26 வயதான ராதிகா என்ற பெண்ணுக்கும், ஹர்டோய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் குப்தாவின் மகன் ஆகாஷ்குப்தாவுக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்துள்ளது. ராதிகாவிற்கு செல்ஃபி எடுப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருபவர் எனவும் விதவிதமாக செல்ஃபி எடுப்பதை எப்பொழுதும் வழக்கமாகக் கொண்டிருப்பார் எனக்கூறப்படுகிறது. அப்படித்தான் சம்பவம் நடந்த அன்று, ராதிகா தனது கணவர் வீட்டின் மாடியில், குண்டு நிரப்பபட்டிருந்த ஒற்றைக்குழல் துப்பாக்கியினை கழுத்தில் வைத்து போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார். அப்பொழுது தான் தவறுதலாக ராதிகாவின் கை ட்ரீக்கரினை அழுத்தியதால் குண்டு வெடித்து உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் உயிரிழந்த ராதிகாவின் கணவர் ஆகாஷிடம் விசாரிக்கையில், விதவிதமாக செல்ஃபி எடுப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர் என்று கூறியுள்ளார். ஏற்கனவே பலமுறை துப்பாக்கியினை வைத்து போட்டோ எடுத்துள்ள நிலையில் தான் வீட்டில் மாடியில் உள்ள அறையில் துப்பாக்கி சுடுவது போன்று செல்ஃபி எடுக்க முயற்சி செய்திருக்கிறார். திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு நாங்கள் சென்றப்பார்த்தப்பொழுது தான், கழுத்தில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார் எனவும், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும், ஆனால் மருத்துவர்கள் ஏற்கனவே ராதிகா உயிரிழ்ந்து விட்டார் எனக்கூறியதாக போலீசார் விசாரணையில் ஆகாஷ் கூறியுள்ளார்.
மேலும் இதுக்குறித்து ராதிகாவின் மாமனார் ராஜேஷ் குப்தா கூறும் பொழுது, பஞ்சாயத்துத் தேர்தல் சமயத்தில், காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட துப்பாக்கியை உள்ளுர் காவல்நிலையத்தில் இருந்து மாலை 3 மணிக்கு என் மகன் ஆகாஷ், வீட்டுக்கு வாங்கி வந்து அறையில் வைத்திருந்தார். ஒரு நான்கு மணியளவில் திடீரென துப்பாக்கிச்சுடும் சத்தம் கேட்டு அலறி அடித்துப்போய் பார்த்தப்பொழுது, தனது மருமகள் துப்பாக்கியினைப் பயன்படுத்தி செல்பி எடுக்கும் பொழுது குண்டு பாய்ந்து உயிரிழந்துவிட்டார் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து ராதிகாவின் செல்போன் மற்றும் துப்பாக்கியினை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனை மேற்கொண்டதில், ராதிகா துப்பாக்கியினால் சுட்டு உயிரிழந்துள்ளார் எனவும் வேறு ஏதும் தடயங்கள் இல்லை என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தான், உயிரிழந்த ராதிகாவின் தந்தை ராகேஷ், தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், வரதட்சணை கொடுமையினால் தான் உயிரிழந்திருப்பார் என காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திருமணம் ஆகி 2 மாதங்களிலே புதுமணப்பெண் உயிரிழந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் செல்ஃபி எடுக்கிறோம் என்று முயற்சியில் பல உயிர்கள் பலியானாலும், விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது