15 பேரை கடித்து குதறிய வெறிநாய்.. படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி..! குளித்தலை அருகே சோகம்..!
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே லாலாப்பேட்டையில் தெருவில் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று சாலையில் நடந்து சென்ற பெரியவர்கள் சிறியவர்கள் என பலரை கடித்துள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வெறிநாய் கடித்ததில் சிறுவர்கள், பெரியவர்கள் உட்பட 15 பேர் காயம் அடைந்தனர். குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே லாலாப்பேட்டையில் தெருவில் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று சாலையில் நடந்து சென்ற பெரியவர்கள் சிறியவர்கள் என பலரை கடித்துள்ளது. லாலாபேட்டை, நந்தன்கோட்டை, திம்மாச்சிபுரம், கே.பேட்டை ஆகிய பகுதிகளில் சுற்றி திரிந்த நாய் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 15 பேரை கடித்து குதறி உள்ளது.
இதில் சிறுவர்கள் கிரி (4), பரிவாணன் (5), பிரதீஸ்வரர் (6), கிஷோர் (8), ராதிகா(38), புகழேந்தி (51), மழைக்கொழுந்து (60), கார்த்திக் (31), மல்லிகா (60) ,சந்திரா (53), முத்துலட்சுமி (35), சாந்தி ( 43), தானபாக்கியம் (62), பாலகுமார் ( 33), சௌந்தர்ராஜன் (31), உள்ளிட்ட 15 பேரை கை மற்றும் கால்களில் கடித்து குதறி உள்ளது.
இதில் காயம் அடைந்த 15 பேரும் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குளித்தலை அருகே வெறி நாய் கடித்ததில் 4 சிறுவர்கள் உட்பட 15 பேர் காயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூரில் அதிக வட்டி தருவதாக 27 நபர்களிடம் 1 கோடியே 22 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் டெபாசிட் வாங்கிக் கொண்டு திருப்பித் தராத பைனான்சியர் கைதான நிலையில் தலைமறைவாக உள்ள அவரது மனைவியை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு, விவிஜி நகர் பகுதியை சேர்ந்தவர் நர்மதா. இவர்களது குடும்ப நண்பர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மனைவி மணிமேகலை. கடந்த 2019ம் ஆண்டு நர்மதாவை தொடர்பு கொண்ட கணவன், மனைவி இருவரும் கரூர் பேருந்து நிலையம் அருகில் AK பைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வருவதாகவும், தங்களிடம் பணம் டெபாசிட் செய்தால் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி, கட்டாயப் படுத்தி ரூபாய் 5 லட்சத்து 90 ஆயிரம் முதலீடு செய்ய வைத்துள்ளனர்.
இதே போன்று 27 நபர்களிடம் 1 கோடியே 22 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் டெபாசிட் வாங்கியுள்ளனர். காலக்கெடு முடிந்தும் பணம் முதலீடு செய்தவர்களுக்கு திருப்பி வழங்கப்படவில்லை. பலமுறை கிருஷ்ணமூர்த்தியை நேரிலும், போனிலும் தொடர்பு கொண்டும் பணம் திருப்பி தரப்படாததால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். புகாரினை பெற்றுக் கொண்ட போலீசார் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அவரது மனைவி மணிமேகலையை போலீசார் தேடி வருகின்றனர்.
பைனான்ஸில் முதலீடு செய்தவர்கள் 27 பேரும் காவலர்கள் மற்றும் காவலர்களின் குடும்பத்தை சார்ந்தவர்கள் என கூறப்படுகிறது. பலரும் தங்களுடைய சேமிப்பு மற்றும் தனிநபர் கடன்களை பெற்று பைனான்ஸில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு முதலீடு செய்ததாக போலீசார் புலம்பி வருகின்றனர்.