மேலும் அறிய
Advertisement
உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட ஸ்வேதா உடல்... சிறையில் அடைக்கப்பட்ட ராம்!
ராமச்சந்திரனை நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.
சென்னை குரோம்பேட்டை ராதாநகர் பகுதியை சேர்ந்தவர் மதியழகன் மாநகர அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.அவரின் மகள் சுவேதா(25) இவர் தாம்பரம் தனியார் கல்லூரியில் லேப் டெக்னீசியன் படித்து வருகிறார். நேற்று பகல் 1.30 மணியளவில் ஸ்வேதா கல்லூரி முடிந்து, சகமாணவிகளுடன் கல்லூரியை விட்டு வெளியே வந்து,மின்சார ரயிலில் குரோம்பேட்டை செல்வதற்காக ரயில்நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தாா்.
அப்போது ரயில்நிலைய வளாகத்தில் மரநிழலில் நின்று கொண்டிருந்த ஸ்வேதாவின் ஆண் நண்பரான, திருக்குவளையை சோந்த ராமச்சந்திரன் என்ற இளைஞா், சுவேதாவை அழைத்து பேசினாா்.சில நிமிடங்கள் பேசியவா்கள்,பின்பு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனா். ராமச்சந்திரன் திடீரென,தனது பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருத்த கத்தியை எடுத்து, ஸ்வேதா கழுத்தை அறுத்தாா்.ஸ்வேதா அலறிக்கொண்டு கீழே விழுந்தாா். உடனே அங்கு நின்ற பொதுமக்கள் ராமச்சந்திரனை பிடிக்க முயன்றனா்.அவா் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டியபடி ,தனது கழுத்தை தானே அறுத்துக்கொண்டு கீழே விழுந்தாா்.
அந்த காட்சியை பாா்த்து பொதுமக்களும்,சக மாணவ, மாணவிகளும் அலறியடித்து ஓடினா். போலீஸ் வந்து இருவரையும் ஆம்புலன்சில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.அங்கு பாா்க்கும்போது ஸ்வேதா உயிரிழந்திருந்தாா். கொலையாளி ராமச்சந்திரன் திருவாரூா் மாவட்டம் திருக்குவளையை சோந்தவா். இவா் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரி.இவா் கூடுவாஞ்சேரியில் தங்கியிருக்கிறாா். மறைமலைநகரில் அருகே உள்ள காா் கம்பெனியில் பணி செய்து வருகிறாா். கல்லூரி மாணவி குடும்பம் குரோம்பேட்டையில் வசித்து வந்தாலும், அவா்களுடைய பூா்வீகம் மயிலாடுதுறை. இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒருநாள் ராமச்சந்திரன் தாம்பரத்திலிருந்து ரயிலில் அவா்களுடைய சொந்த ஊருக்கு சென்றாா். அதே ரயிலில் அதே கேரெஜ்ஜில் ஸ்வேதாவும் அவா்களுடைய சொந்த ஊரான மயிலாடுதுறைக்கு சென்றாா். அப்போது இவா்களுக்குள் ஏற்பட்ட ரயில் நட்பு, அதன்பின்பு காதலாக மாறியது.
சமீபகாலமாக ராமச்சந்திரனை சந்தித்துத்து பேசுவதை ஸ்வேதா தவிா்த்து வந்ததாக கூறப்படுகிறது. அதோடு ராமச்சந்திரன் போன் செய்தால்,ஸ்வேதா எடுப்பது கிடையாது . அல்லது நீண்ட நேரமாக பிஸி என்றே வந்துள்ளது. இது ராமச்சந்திரனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஸ்வேதா வேறு யாரிடமோ பேசுகிறாா். எனவே தான்,தன்னிடம் பேசுவதை படிப்படியாக குறைக்கின்றாா் என்று ராமச்சந்திரன் நினைத்தாா். நேற்று இரவும் ராமச்சந்திரன் போன் செய்தபோது நீண்ட நேரமாக பிஸ்சியோகவே இருந்துள்ளது. இதனையடுத்து நேற்று பிற்பகல் ஸ்வேதாவை சந்தித்த ராமச்சந்திரன் ஸ்வேதாவை கொலை செய்தார்.
கழுத்தறுத்து கொண்ட ராமச்சந்திரனை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக காவல்துறையினர் சேர்த்தனர். ஸ்வேதாவின் உடலும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யபட்டது. உடலை வாங்குவதற்காக ஏராளமான உறவினர்கள் குவிந்ததால் சிகிச்சை பெற்று வந்த ராமசந்திரனை பாதுகாப்புக்காக மருத்துவமனையின், மற்றொரு வளாகத்திற்க்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து ராமசந்திரன் உடல்நிலை சீரானதால் கொலை வழக்கு பதிவு செய்யபட்டு துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ், பாதுக்காப்புடன் மருத்துவமனையில் இருந்து நேரடியாக தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து ராமச்சந்திரன் சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக, நேற்று தாம்பரம் ரயில் நிலையம் அருகே கொலை செய்யப்பட்ட ஸ்வேதாவின் உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் முறைப்படி உடலை ஒப்படைக்கபட்டது
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
ஆட்டோ
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion