மேலும் அறிய

Ojha Suicide : 15 நாட்களில் அடுத்த ஷாக்! சடலமாக மீட்கப்பட்ட நடிகை ஓஜாவின் காதலனும் தற்கொலை!

15 நாட்களுக்கு முன் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட நடிகையின் ஆண் நண்பரும் இன்று தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். 

15 நாட்களுக்கு முன்பு, ஒடிசா மாநிலத்தில் பிரபல சீரியல் நடிகை (Rashmirekha Ojha) ராஷ்மிரெஜா ஓஜா தனது வீட்டில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டார். நடிகையின் மரணம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவருடன் ஒரே வீட்டில் தங்கியிருந்த சந்தோஷ் பாட்ராவிக்கும் (Santosh Patra ) நடிகையின் மரணத்துக்கும் தொடர்பு இருப்பதாக நாஷ்மிரெஜாவின் தந்தை குற்றம் சாட்டி இருந்தார். இந்நிலையில் கடந்த 15 நாட்களாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். குறிப்பாக ஆண் நண்பரான சந்தோஷுடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

இந்நிலையில் இன்று தான் வசித்து வந்த வீட்டில் சந்தோஷ் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சந்தோஷின் சடலத்தை நேரில் கண்ட அக்கம்பக்கத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த சந்தோஷ் குறித்து பேசிய அக்கம்பக்கத்தினர், ''சந்தோஷ் மிகவும் நல்லவர். இந்த இளம் வயதிலேயே அவர் உயிரிழந்தது வருத்தமாக இருக்கிறது’’எனத் தெரிவித்தனர். தற்போது போலீசார் இரு உயிரிழப்புகளையும் தீவிரமாக விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். சந்தோஷ் ஏன் உயிரிழந்தார், தற்கொலைதானா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சந்தோஷின் உயிரிழப்புக்கு காரணம் தெரியவந்தாலே நடிகையின் மரணத்துக்கான காரணமும் தெரியவரும் என போலீசார் எதிர்பார்க்கின்றனர்.

Ojha Suicide : 15 நாட்களில் அடுத்த ஷாக்! சடலமாக மீட்கப்பட்ட நடிகை ஓஜாவின் காதலனும் தற்கொலை!

நடந்தது என்ன?

Nayapalli நகரில் உள்ள வீட்டில் ராஷ்மிரெஜா ஓஜா வாடைக்கு தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். அவரின் வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததை தெரிந்து கொண்ட வீட்டின் உரிமையாளர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு விரைந்து சென்ற காவல் துறையினர், தூக்கில் தொங்கியபடி இருந்த  ராஷ்மிரெஜா ஓஜாவின் உடலை  மீட்டனர். 

நடிகை தங்கியிருந்த அறையிலிருந்து கடிதம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. இதை தற்கொலை என்று காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். மேலும், அவர் அறையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட கடிதத்தில் ராஷ்மிரெஜா ஓஜாவின் மரணத்திற்கு காரணமாக யாரையிம் குறிப்பிடவில்லை என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பின், ராஷ்மிரெஜா ஓஜாவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,சென்னை - 600 028.தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

T.NAGAR தொகுதி யாருக்கு?பாஜகவின் பலே திட்டம் விட்டுக்கொடுக்குமா அதிமுக? | Chennai | BJP Election Plan
அதிகாரி நெஞ்சுவலி நாடகம் “சார் இப்படி நடிக்காதீங்க” தவெகவினர் ஆர்ப்பாட்டம் | Officer Fake Heart Attack
Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
‘தூத்துக்குடி மாவட்ட மக்களே - வருகிறது விமான பயிற்சி பள்ளி’ எங்கு தெரியுமா..?
‘தூத்துக்குடி மாவட்ட மக்களே - வருகிறது விமான பயிற்சி பள்ளி’ எங்கு தெரியுமா..?
SUV: காம்பேக்ட் எஸ்யுவி மீது வெறி பிடித்து திரியும் இந்தியர்கள்.. என்ன காரணம்? நகரங்களில் செய்யும் மேஜிக்?
SUV: காம்பேக்ட் எஸ்யுவி மீது வெறி பிடித்து திரியும் இந்தியர்கள்.. என்ன காரணம்? நகரங்களில் செய்யும் மேஜிக்?
Metro Rail: மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மோடி வந்து சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகமா.? விளாசும் ஸ்டாலின்
மோடி வந்து சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகமா.? விளாசும் ஸ்டாலின்
Embed widget