8ஆம் வகுப்பு மாணவரை வெட்டிய சக மாணவருக்கு நீதிமன்றக் காவல்: எத்தனை நாட்கள்?
பாளையங்கோட்டையில் 8ஆம் வகுப்பு மாணவரை வெட்டிய சக மாணவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டையில் 8ஆம் வகுப்பு மாணவரை வெட்டிய சக மாணவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.
பாளையங்கோட்டையில் ரோஸ்மேரி பள்ளியில் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் இரண்டு பேருக்கு இடையே பென்சில் கொடுக்கல் வாங்கலில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு மாணவன் நேற்று பள்ளிக்கு வரும்போது பேக்கில் அரிவாள் ஒன்றை மறைத்து வைத்து எடுத்து வந்துள்ளார்.
பள்ளி ஆரம்பித்ததும் அந்த மாணவர்களுக்கு இடையே சண்டை வந்துள்ளது. இதனால் அரிவாளை எடுத்து வந்த மாணவன் இன்னொரு மாணவன் மீது தாக்குதல் நடத்தினான். இதில் தலைப்பகுதி, தோள்பட்டை, முதுகு என அந்த மாணவனுக்கு வெட்டுக்காயங்கள் அதிகமாக விழுந்தன.
இதைப்பார்த்த ஆசிரியர்கள் தாக்குதல் நடத்திய மாணவனை தடுக்க முயன்றனர். ஆனால் அவன் ஆசிரியர்கள் மீதும் தாக்குதல் நடத்தினான். இதில் இரண்டு ஆசிரியர்கள் படுகாயமடைந்தனர்.
பாதிக்கப்பட்ட ஒரு மாணவன் இரண்டு ஆசிரியர்கள் என மூன்று பேரும் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் தாக்குதல் நடத்திய மாணவனை பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மாணவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். கைது செய்யப்பட்ட சிறுவனுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 29ஆம் தேதி வரை சிறுவனை சீர்திருத்த குழுமத்தில் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், தகுதியான நபர்களை கொண்டு சிறுவனுக்கு கவுன்சிலிங் கொடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

