Womans Equality Day : 30 வயதில் முன்னணி : 10 ப்ரைவேட் ஜெட்கள்.. அசத்தும் இளம்பெண் தொழிலதிபர்..
33 வயதான கனிகா டெக்ரிவால் தனது தற்போதைய நிகர மதிப்பு ரூ. 420 கோடி ரூபாய். புற்றுநோய், பெற்றோரின் எதிர்ப்பு மற்றும் சாதாரண பாலினப் பாகுபாடு ஆகியவற்றை மீறி தனது சொந்த விமான ஸ்டார்ட்டப்பை நிறுவினார
ஜெட்செட்கோவின் நிறுவனர் கனிகா டெக்ரிவால். ஒரு விமான ஒருங்கிணைப்பு ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் உரிமையாளரான இவர், வாடகை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை உரிமையாளர்களுக்காக இயக்குகிறார், நிர்வகிக்கிறார் மற்றும் அவற்றில் பறக்கிறார். கோடக் தனியார் வங்கி ஹுரூன் முன்னணி பணக்கார பெண்கள் பட்டியலில் 2021ல் இடம்பிடித்த இளைய பணக்காரப் பெண் ஆவார். 33 வயதான கனிகா டெக்ரிவால் தனது தற்போதைய நிகர மதிப்பு ரூ. 420 கோடி ரூபாய். புற்றுநோய், பெற்றோரின் எதிர்ப்பு மற்றும் சாதாரண பாலினப் பாகுபாடு ஆகியவற்றை மீறி தனது சொந்த விமானம் சார்ந்த ஸ்டார்ட்டப்பை நிறுவினார். ஒரு தசாப்த கடின உழைப்புக்குப் பிறகு தற்போது இந்த பறக்கும் தொழிலதிபர் 10 தனியார் ஜெட் விமானங்களை வைத்திருக்கிறார்.
இந்திய வானத்தின் உபெர் என்றும் அழைக்கப்படும் ஜெட்செட்கோவின் பயணம் 2012ம் ஆண்டில் தொடங்கியது. தனிப்பட்ட விமானங்களை அனைவருக்கும் அணுகக்கூடியதாகவும், வெளிப்படையானதாகவும், சிக்கனமாகவும், திறமையாகவும் மாற்றும் நோக்கத்துடன் அவரது நிறுவனமான ஜெட்செட்கோ, தனியார் ஜெட் மற்றும் ஹெலிகாப்டர் ஆகியவற்றின் சார்ட்டர் பயணங்களுக்கான இந்தியாவின் முதல் மற்றும் ஒரே சந்தையாகும், இது இந்தியாவில் சார்ட்டர் விமானத் துறையை மாற்றியமைத்ததற்காக பெருமை பெற்றது.
View this post on Instagram
கனிகா தெக்ரிவால் போபாலில் உள்ள மார்வாரி குடும்பத்தில் பிறந்தவர். போபாலில் உள்ள பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) வளாகத்தில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு பள்ளியின் முன்னாள் மாணவி கனிகா தற்போது ஹைதராபாத் தொழிலதிபரை மணந்துள்ளார். சர்வதேச வானில் இந்திய விமானக்கனவைப் பறக்கச் செய்வதே தனது லட்சியம் என்கிறார் இந்த இளம் நெருப்பு!