UPI Payment: யு.பி.ஐ. பணப்பரிவர்த்தனை செய்றீங்களா? வந்தது நியூ ரூல்ஸ் - நோட் பண்ணிக்கோங்க மக்களே!
யுபிஐ பண பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்த புதிய விதிமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
UPI Payment: யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்த புதிய விதிமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
யுபிஐ பணப் பரிவர்த்தனைகள்:
இன்றைக்கு அனைவரது கையிலும் ஆண்ட்ராய்டு போன்கள் இருக்கிறது. இதற்கேற்றவாறு அனைத்து துறைகளும் ஸ்மார்ட் ஆன வசதிகளை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அந்த வகையில் பல வங்கி கணக்குகளையும் ஒரே மொபைல் செயலி மூலம் எளிதாக கையாளக்கூடிய UPI (Unified Payments Interface) வசதியும் உள்ளது.
ஆரம்பத்தில் பெரிய அளவில் வளர்ச்சி இல்லாத நிலையில், ஆண்ட்ராய்டு போன்கள் வந்துவிட்ட பிறகு UPI வசதி என்பது அசுர வளர்ச்சி அடைந்து விட்டது. அதற்கேற்ப Gpay, Paytm, PhonePe போன்ற பல்வேறு செயலிகளும் நடைபாதை வியாபாரம் தொடங்கி பெரிய பெரிய வணிகம் வரை யுபிஐ பயன்பாட்டை அதிகரித்துள்ளது.
மத்திய அரசும், வங்கிகளும் பயனாளர்களின் வசதிகளை மேற்படுத்துவதற்காக யு.பி.ஐ தொழில்நுட்பத்தில் பல்வேறு மாற்றங்கள், மேம்பாடுகள் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, யுபிஐ பண பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்த புதிய விதிமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
அமலுக்கு வந்த புதிய விதிமுறைகள்:
- ஓராண்டுக்கு மேல் செயல்படுத்தப்படாமல் இருக்கும் யுபிஐ ஐடிகளை செயலிழக்கச் செய்ய கூகுள் பே, பேடிஎம் செயலிகளுக்கு இந்திய தேசிய பரிவர்த்தனைக் கழகம் (என்பிசிஐ) அறிவுறுத்தியுள்ளது.
- இன்றைய நவீன காலகட்டத்தில் அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடிகளை தவிர்க்க ரூ.2,000-க்கும் அதிகமாக செய்யப்படும் முதல் பணப் பரிவர்த்தனைக்கு நான்கு மணி நேரம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
- நாடு முழுவதும் மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான யுபிஐ பரிவர்த்தனை உச்ச வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.1 லட்சமாக இருந்த நிலையில், ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
- தினசரி பணப் பரிவர்த்தனையின் உச்சவரம்பபு ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
- ரிசர்வ் வங்கியானது ஜப்பானின் ஹிட்டாச்சியுடன் இணைந்து தற்போது நாடு முழுவதும் யுபிஐ ஏடிஎம்களை திறக்க உள்ளது. அதில், உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து க்யூஆர் கோர்டை ஸ்கேன் செய்து பணத்தை எடுக்கலாம்.
- ஆன்லைன் வாலட்டுகள் போன்ற ப்ரீபெய்டு பேமண்ட் கருவி (Prepaid Payment Instruments) மூலம் ரூ.2,000க்கு மேல் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு 1.1 சதவீத பரிமாற்ற கட்டணம் நடைமுறைக்கு வந்துள்ளது.
- யுபிஐ மூலம் பணம் பரிவர்த்தனை செய்யும்போது, சம்பந்தப்பட்ட நபர்களின் வங்கிக் கணக்கு பெயர் திரையில் காட்டப்படும். இதன் முலம், தவறான நபர்களுக்கு பணம் செலுத்துவது தடுக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க