மேலும் அறிய

TNPSC: டைப்பிங்கில் தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? உங்களுக்காக காத்திருக்கும் அரசு பணி.. மாதம் இவ்வளவு சம்பளமா? முழு விவரம்!

TNPSC: தமிழ்நாடு அரசுப் பணி தேர்வாணையத்தின் வேலைவாய்ப்பு குறித்து முழு விவரத்தை இங்கே காணலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சார்நிலைப் பணியில் அடங்கிய உதவி பயிற்சி அலுவலர் (சுருக்கெழுத்து -ஆங்கிலம்) மற்றும் தமிழ்நாடு பொது சார்நிலைப் பணியில் அடங்கிய இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் (Assistant Training Officer (Stenography-English)) பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினிவழித் தேர்விற்கு ஆக்ஸ்ட் மாதம் 16-ம் தேதி வரை இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம். 

பணி விவரம்:

உதவி பயிற்சி அலுவலர் (சுருக்கெழுத்து -ஆங்கிலம்) (Assistant Training Officer (Stenography English))

இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் (Junior Technical Assistant)

மொத்த பணியிடங்கள் : 07

கல்வித் தகுதிகள்: 

  • அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் கல்லூரி படிப்பிற்கு பதிவு செய்திருக்க வேண்டும் அல்லது கல்லூரியில் படிக்க தகுதி பெற்றிருப்பவராக இருக்க வேண்டும்.
  • அரசு அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தில் ஜூனியர் க்ரேட் (ஆங்கிலம்)  டைப்பிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு தமிழ் டைப்பிங் தெரிர்ந்திருக்க வேண்டும். 
  • ஜூனியர் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு உயர்கல்வி படிப்பில் (+2, 10-ம் வகுப்பு) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • கைவினைத் தொழில்நுட்ப படிப்பில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். ஆடை தயாரிப்பு துறையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 

பட்டியலின/ பழங்குடியின பிரிவினர் உள்ளிட்ட பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை. ஏனையோர்க்கு அதிகபட்ச வயதுவரம்பு 32 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது. அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. 

ஊதிய விவரம்: 

உதவி பயிற்சி அலுவலர் (சுருக்கெழுத்து -ஆங்கிலம்) - ரூ.35,900 - ரூ.1,31,500

இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் - ரூ.35,400 - ரூ.1,30,400

விண்ணப்பக் கட்டணம்: 

நிரந்தரப் பதிவுக்கட்டணம் - ரூ.150

எழுத்துத் தேர்வு - ரூ.150

தேர்வுக் கட்டணச் சலுகை/ விலக்கு விவரம்: 

TNPSC: டைப்பிங்கில் தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? உங்களுக்காக காத்திருக்கும் அரசு பணி.. மாதம் இவ்வளவு சம்பளமா? முழு விவரம்!

ஒரு முறை பதிவு / நிரந்தரப்பதிவு:

விண்ணப்பதாரர்கள் நிரந்தரப் பதிவுக்கட்டணமாக ரூ.150/-ஐ (ரூபாய் நூற்று ஐம்பது மட்டும்) செலுத்தி தங்களது அடிப்படை விவரங்களை நிரந்தரப்பதிவில் (OTR) கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த நிரந்தர பதிவு முறை பதிவு செய்த நாளிலிருந்து 5 வருட காலத்திற்கு செல்லத்தக்கதாகும். அதன் பிறகு உரிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி இதனை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

ஒரு நிரந்தரப் பதிவானது எந்த ஒரு பதவிக்கான விண்ணப்பமாக கருதப்படமாட்டாது. விண்ணப்பதாரர் தேர்வு எழுத விரும்பும் ஒவ்வொரு தேர்விற்கும் தனித்தனியே இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு நிரந்தரப் பதிவுக்கான பதிவுக் கட்டணம் இந்த நியமனத்திற்கான விண்ணப்பம் / தேர்வுக் கட்டணம் அல்ல. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்போது செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர் தங்களுடைய ஒரு நிரந்தரப் பதிவுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும்.

எழுத்துத் தேர்வு மையங்கள்:

இந்தப் பணியிடத்திற்கான தேர்வு சென்னை, மதுரை,கோயம்புத்தூர், திருநெல்வேலி, திருச்சிட்ராப்பள்ளி, சேலம்,வேலூர் ஆகிய இடங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

இதற்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல்/ வாய்மொழித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்: 

TNPSC: டைப்பிங்கில் தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? உங்களுக்காக காத்திருக்கும் அரசு பணி.. மாதம் இவ்வளவு சம்பளமா? முழு விவரம்!

எப்படி விண்ணப்பிப்பது?

www.tnpscexams.in / www.tnpsc.gov.in - ஆகிய இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

முக்கியமான நாட்கள்:

TNPSC: டைப்பிங்கில் தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? உங்களுக்காக காத்திருக்கும் அரசு பணி.. மாதம் இவ்வளவு சம்பளமா? முழு விவரம்!

விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.08.202023

அறிவிப்பின் முழு விவரத்திற்கு https://tnpsc.gov.in/Document/english/14_2023_English.pdf- என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Bihar Election 2025 Update: பீகார் தேர்தல் 2025; முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு; இதுவரை இல்லாத அளவாக 64.66% வாக்குகள் பதிவு
பீகார் தேர்தல் 2025; முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு; இதுவரை இல்லாத அளவாக 64.66% வாக்குகள் பதிவு
Crude Oil Import: இப்படி ஆகிப்போச்சே.! ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதலை குறைக்கும் இந்தியா; வெளியான முக்கிய தகவல்
இப்படி ஆகிப்போச்சே.! ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதலை குறைக்கும் இந்தியா; வெளியான முக்கிய தகவல்
IND Vs AUS T20 Match: சுந்தர், அக்சர், டூபேவின் சுழலில் சிக்கிய ஆஸ்திரேலியா; 4-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி
சுந்தர், அக்சர், டூபேவின் சுழலில் சிக்கிய ஆஸ்திரேலியா; 4-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி
Trump Vs India Pak. Clash: மாத்தி மாத்தி பேசாதீங்க ட்ரம்ப் சார்; இந்தியா-பாக். மோதல் குறித்து புதிய தகவல் - என்ன சொன்னார்.?
மாத்தி மாத்தி பேசாதீங்க ட்ரம்ப் சார்; இந்தியா-பாக். மோதல் குறித்து புதிய தகவல் - என்ன சொன்னார்.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ajith Supports Vijay | ’’விஜய்க்கு தான் என் SUPPORT’’அஜித் பரபரப்பு விளக்கம் வெளியான திடீர் ஆடியோ
Madhampatti Rangaraj  | ”ஏய் பொண்டாட்டி மிஸ் யூ” கொஞ்சிய மாதம்பட்டி ரங்கராஜ் ட்விஸ்ட் கொடுத்த ஜாய்
Joy vs Shruti| ’’என் புருஷனை விட்டு போ’’ஸ்ருதியை மிரட்டிய ஜாய்!CHATS LEAKED Madhampatti Rangaraj
திரை தீ பிடிக்கும்... ஒன்றுசேரும் ரஜினி - கமல்! ரஜினி கடைசி படமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bihar Election 2025 Update: பீகார் தேர்தல் 2025; முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு; இதுவரை இல்லாத அளவாக 64.66% வாக்குகள் பதிவு
பீகார் தேர்தல் 2025; முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு; இதுவரை இல்லாத அளவாக 64.66% வாக்குகள் பதிவு
Crude Oil Import: இப்படி ஆகிப்போச்சே.! ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதலை குறைக்கும் இந்தியா; வெளியான முக்கிய தகவல்
இப்படி ஆகிப்போச்சே.! ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதலை குறைக்கும் இந்தியா; வெளியான முக்கிய தகவல்
IND Vs AUS T20 Match: சுந்தர், அக்சர், டூபேவின் சுழலில் சிக்கிய ஆஸ்திரேலியா; 4-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி
சுந்தர், அக்சர், டூபேவின் சுழலில் சிக்கிய ஆஸ்திரேலியா; 4-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி
Trump Vs India Pak. Clash: மாத்தி மாத்தி பேசாதீங்க ட்ரம்ப் சார்; இந்தியா-பாக். மோதல் குறித்து புதிய தகவல் - என்ன சொன்னார்.?
மாத்தி மாத்தி பேசாதீங்க ட்ரம்ப் சார்; இந்தியா-பாக். மோதல் குறித்து புதிய தகவல் - என்ன சொன்னார்.?
Seeman Vijayakanth: விஜயகாந்த் போல நான் செய்ய மாட்டேன்; மக்களுக்கு கசாயம் கொடுத்து வருகிறேன்; என்ன சொன்னார் சீமான்.?
விஜயகாந்த் போல நான் செய்ய மாட்டேன்; மக்களுக்கு கசாயம் கொடுத்து வருகிறேன்; என்ன சொன்னார் சீமான்.?
Syllabus Change: பள்ளி மாணவர்களே.. மாறும் பாடத்திட்டம்- வெளியான முக்கிய அறிவிப்பு- எப்போது?
Syllabus Change: பள்ளி மாணவர்களே.. மாறும் பாடத்திட்டம்- வெளியான முக்கிய அறிவிப்பு- எப்போது?
பொதுக்கூட்டம் நடத்த 20 லட்சம் டெபாசிட்.! வெளியான நிபந்தனைகள்- என்னென்ன தெரியுமா.?
பொதுக்கூட்டம் நடத்த 20 லட்சம் டெபாசிட்.! வெளியான நிபந்தனைகள்- என்னென்ன தெரியுமா.?
Ind Vs Aus 4th T20: 167 ரன்களை எடுத்த இந்தியா; வெற்றிக்கு இது போதுமா.? என்ன செய்யப் போகிறார்கள் சூர்யா பாய்ஸ்.?
167 ரன்களை எடுத்த இந்தியா; வெற்றிக்கு இது போதுமா.? என்ன செய்யப் போகிறார்கள் சூர்யா பாய்ஸ்.?
Embed widget